ஆர்ஜேடி - காங்கிரஸ் ஆலோசனை
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் “மகாகத் பந்தன் கூட்டணி” ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கியுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை, விகாஷீல் இன்ஷான் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று தில்லியில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகள் பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற் கொண்டன. காங்கிரஸ் சார்பில் அக்கட்சி யின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி என இரு கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்து இடதுசாரிகளுடன்... அடுத்ததாக இடதுசாரிக் கட்சிக ளுடன் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த பேச்சுவார்த்தை இந்த வாரத்திற்குள் நிறைவு பெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.