states

img

12 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்

12 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்

பாஜக ஆளும் உத்தரகண்டில் கொடூரம்

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பாலியல் வன்முறை சம்பவங்களின் கூடாரங்களாக மாறியுள்ளன. இந்நிலையில், இமயமலைச் சாரலில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி உள்ளார். அமித் ஷா - மோடிக்கு  மிக நெருக்கமானவர். இவரது ஆட்சிக் காலத்தில் உத்தரகண்ட் மாநிலம் பாது காப்பு என்ற சொல்லுக்குக் கூட அர்த்தம் இல்லாத நிலைமை உள்ளது. இத்தகைய சூழலில் ரூர்க்கியில் உள்ள அரசு கல்லூரி யில் 12 மாணவிகளை பாலியல் வன் கொடுமை செய்ததாக 55 வயது உதவிப் பேராசிரியர் டாக்டர் ஆலிம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தேர்வு நடைபெறும் சமயங்களில் ஆலிம் மாணவிகளிடம் பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.