மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி
பஹல்காமில் பல அப்பாவி உயிர்களை இழந்துள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தலையிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். இது அனைவருக்குமானது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சத்ருகன் சின்ஹா
பீகார் மாநிலம் தர்பங்காவில் அம்பேத்கர் விடுதியில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் பாஜக கூட்டணி அரசின் இந்த நடவடிக்கை ராகுல் காந்திக்கு தான் சாதகமாகவே அமையும். பாஜக கூட்டணிக்கு கேடாகவே அமையும்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
பாஜக தலைவர் ஜெகதீஷ் தேவ்டா, ராணுவம் பிரதமர் மோடியின் பாதத்தில் வணங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஜெகதீஷ் உள்ளிட்ட பாஜகவினரின் கருத்துகள் நம் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் வீரத்தை அவமதிக்கின்றன. நமது இராணுவம் அவமதிக்கப்படும்போது இந்த தேசம் அமைதியாக இருக்க முடியாது. பாஜக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அப்னி ஜனதா கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா
மத்தியப் பிரதேச அமைச்சர் கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக அரசியலமைப்புக்கு எதிரான கருத்து தெரிவித்ததால், அம்மாநில உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதுபோலவே, விங் கமாண்டர் வியோமிகாவிற்கு எதிராக ராம் கோபால் (சமாஜ்வாதி) தெரிவித்த கருத்துகளும் மோசமானது தான்.