பாஜக ஆளும் சத்தீஸ்கரில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் பழங்குடி கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. அம்மாநிலத்தின் பஸ் தார் மாவட்டத் தின் பாஞ்ச்தார் கிரா மத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சுமித் குமார் (25) என்ற இளைஞர் (சுமித் குமார்) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமித் குமார் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்றால், அந்தக் குடும்பம் மீண்டும் இந்து மதத்திற்கு (பழங்குடி வழிபாட்டு முறைக்கு) மாற வேண்டும் என இந்துத்துவா குண்டர்கள் சடல அர சியலில் ஈடுபட்டனர். ஆனால் சுமித் குமாரின் குடும் பத்தினர் நிபந்தனையை ஏற்க மறுத்தனர். இதனால் ஆத்திரம டைந்த 500-க்கும் மேற்பட்ட இந் துத்துவா கும்பல் சுமித் குமார் குடும் பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அருகில் உள்ள 2 தேவாலயங்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி அடா வடியில் ஈடுபட்டனர். இந்த தாக்குத லில் சுமித் குமார் வீடு மற்றும் 2 தேவாலயங்கள் தீக்கிரையாகின. சில வாகனங்கள் தீயிட்டு கொளுத் தப்பட்டன. பலர் படுகாயமடைந்த னர். இதுதொடர்பாக சுமித் குமாரின் குடும்பத்தினரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,”எங்கள் மீது தாக்கு தல் நடத்தியவர்கள் கூரிய ஆயு தங்களுடன் வந்தனர். அவர்கள் அனைவரும் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க நாங்கள் காட்டுப் பகுதிக் குள் ஓடி ஒளிந்து தற்காத்துக் கொண்டோம். புகார் அளித்த பின் நீண்ட நேரம் கழித்து வந்த காவல் துறையினர் இது ஒரு சமூக மோதல் என்று கூறினர். ஆனால் இது மத மோதல் என்று நாங்கள் ஆதாரத்துடன் கூறினாலும், அதனை காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மத வன் முறை சம்பவம் தொடர்பாக சில நபர்கள் மீது மட்டுமே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் முக்கியக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்பட வில்லை” என அவர் குற்றம்சாட்டி யுள்ளார். பழங்குடி கிறிஸ்தவர்களை விரட்ட சதி சத்தீஸ்கரில் பழங்குடி சமூ கத்தைச் சேர்ந்த விஷ்ணு சாய் முத லமைச்சராக உள்ளார். பழங்குடி யினர் நலனுக்கான விஷ்ணு சாய் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டார் என பிரதமர் மோடி பதவி யேற்பு விழாவின் போது கூறினார். ஆனால் முதலமைச்சராக விஷ்ணு சாய் பதவியில் அமர்ந்த பின்பே, சத்தீஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந் துள்ளது. குறிப்பாக பஸ்தார் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்க ளில் கடந்த 2 ஆண்டுகளாகவே கிறிஸ்தவ பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரு கின்றன. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினரை கிராமத்திலிருந்து வெளியேற்று வது அல்லது அவர்களுக்குக் குடி நீர் மற்றும் ரேஷன் பொருட்களை மறுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. மதமாற்றம் செய்ப வர்கள் தங்கள் பழங்குடி கலாச்சா ரத்தைச் சிதைப்பதாகக் கூறி பழங்குடியினருக்கு இடையி லேயே இந்துத்துவா அமைப்புகள் வன்முறையை தூண்டிவிடுவ தாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சத்தீஸ்கர் மாநி லத்தில் பழங்குடி மக்களை விரட்ட பாஜக தொடர்ச்சியாக சதி வேலை யில் ஈடுபட்டு வருகிறது என செய்தி கள் வெளியாகி வருகின்றன.
