முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் யஷ்வந்த் வர்மா வீட்டில் எப்படி இவ்வளவு பணம் வந்தது? என்பது தொடர்பாக விசாரிக்க மூன்று நீதிபதிகளைக் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இதுதொடர்பாக யாரும் அதிகம் பேச முடியாது. விசாரணைக் குழுவின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு தான்.
உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கை என்பது இந்திய அரசிய லமைப்பை, புல்டோசர் வைத்து நசுக்குவ தற்கு இணையானது. சட்டவிரோதமாக கட்டப்பட்டவை என மக்களின் வீடுகளை தரைமட்டமாக்குவது கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்
உத்தரப்பிரதேச பாஜக அரசு மக்களின் பிரச்சனை களை புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. மக்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினால், கவனத்தை திசை திருப்ப எதையாவது புதிய பிரச்சனைகளை தூண்டி விடுகிறது. முதலில் மாநிலத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திமுக எம்.பி., பி.வில்சன்
முறைகேடுகளில் ஈடுபடும் நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சார்ந்த உரிய சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும். நீதிபதிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை தேவையானது தான்.