states

img

ஜுபீன் கார்க் மர்ம மரணம் குறித்த எஸ்ஐடி விசாரணையை நேர்மையாக நடத்துக!

ஜுபீன் கார்க் மர்ம மரணம் குறித்த எஸ்ஐடி விசாரணையை நேர்மையாக நடத்துக!

அசாமில் சிபிஎம் போராட்டம்

கவுகாத்தி வடகிழக்கு மாநிலம் அசா மைச் சேர்ந்தவர் ஜுபீன் கார்க். இவர் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். அசாமின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக வும் திகழ்ந்த இவர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டில் ஸ்கூபா டைவிங்கின் (ஆல்கடல் நீச்சல்) போது மர்மமான முறையில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் அசாமில் மீண்டும் ஒரு முறை பிரேதப் பரிசோதனை செய்தபின், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது. ஜூபீன் கார்க்கின் திடீர் மரணம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி மற்றும் கவு காத்தி உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா  சைகியா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அசாம் பாஜக அரசு அமைத்துள்ளது. ஆனால் எஸ்ஐடி விசாரணையில் சர்ச்சை மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஜுபீன் கார்க் மர்ம  மரணம் குறித்த எஸ்ஐடி விசாரணை யை நேர்மையாக நடந்த வேண்டும் என அசாம் மாநிலத்தின் கவுகாத்தி யின் தீகாலிபுகுரியில் புதன்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  போராட்டம் நடத்தியது. ஜுபீன் கார்க் கிற்கு நீதி வேண்டும் (#JusticeForZubeenGarg) என்ற பதாகைகளுடனும், முழக்கங்களுட னும் நடைபெற்ற இந்த போராட்டத் தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சுப்ர காஷ் தாலுக்தர், மூத்த தலைவர்களான ஹேமன் தாஸ், உத்தவ் பர்மன், சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சன் தாலுக்தர் மற்றும் கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தின் போது உரையாற்றிய சிபிஎம் மூத்த தலைவர் ஹேமன் தாஸ்,”ஜுபீன் கார்க் மர்ம மரணம் குறித்த எஸ்ஐடி விசா ரணையில் முரண்பட்ட கூற்றுகள் வெளி யாகியுள்ளன. இது பொது மக்க ளிடையே அதிகரித்து வரும் அவ நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித மான விளக்கங்கள் வழங்கப்படு கின்றன. ஆனால் ஜுபீனின் மர ணத்திற்கு பின்னால் உள்ள உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. இது ஒரு கொலை வழக்கு என்றே முதலமைச்சர்  தானாகவே கூறினார். அது உண்மை யென்றால், அதன் பின்னால் யார்  இருந்தனர்? உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்” என அவர் கூறினார்.  வன்முறை பாக்சா மாவட்டத்தில் ஜுபீன் கார்க் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் சிலர் வேண்டுமென்றே வன்முறையை தூண்டினர். இது கண்டனத்துக்குரியது ஆகும். சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தோல்வியடைந்ததற்காக அசாம் காவல்துறை நிகழ்ச்சி பொறுப்பா ளர்களை குற்றம்சாட்டி, தடியடி நடத்தி யது என போராட்டக் களத்தில் சிபிஎம் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.