திரிபுராவில் கல்வியைச் சீர்குலைக்க பாஜக அரசு தீவிரம் பள்ளி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை 150% உயர்த்தி அடாவடி
அகர்தலா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. இம்மாநில அரசு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கட்டணங்களை திடீரென உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக திரிபுரா இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TBSE) தலைவர் தனஞ்சய் கோன் சவுத்ரி அக்., 9ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “எங்களுக்கு வேறு வழியில்லை. அசௌகரி யத்தை ஏற்படுத்தாமல் எதையும் செய்ய முடி யாது. வாரியத்தின் மீதான சுமை அதி கரித்துள்ளது. அதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுக் கட்டணங்களை உயர்த்துவது தான் நல்லது”என கூறினார். 150% உயர்வு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய பொதுத் தேர்வுக் கட்டணம் ரூ.120 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 150% கட்டண உயர்வு ஆகும். அதே போல ரூ.150 ஆக இருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக் கட்டணம் ரூ.400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 166% கட்டண உயர்வு ஆகும். இந்த புதிய தேர்வுக் கட்டண உயர்வு அக்டோபர் 10ஆம் தேதி அமலுக்கு வந்தது. திரிபுராவில் தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் சுமார் ரூ.1,76,943 ஆக உள்ளது. இது மிக குறைவானது என்ற நிலை யில், இந்த செங்குத்தானதொரு கட்டண உயர்வு, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் என திரிபுரா இடை நிலைக் கல்வி வாரியத்தின் இந்த அறி விப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜிதேந்திர சவுத்ரி திரிபுரா எதிர்க்கட்சித் தலைவரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி “தி வயர்” செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,”திரிபுரா மாநிலத்தில் கல்வியின் முன்னேற்றத்திற்கு பாஜக அர சாங்கத்திடம் எந்த முன்முயற்சியும் இல்லை. ஆனால் தேர்வுக் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளார்கள். இந்த தேர்வுக் கட்டண உயர்வு ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் கல்வி முறைக்கு எதிரானது ஆகும். மேலும் இது மாநிலத்தின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளும். தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியது திரிபுரா இடைநிலைக் கல்வி வாரியத்தின் சுயேச்சையான முடிவு எனக் கூறப்பட்டாலும், அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஒப்புதல் இல்லாமல் கட்டண உயர்வுகள் நடக்காது. அதற்கு வாய்ப்பில்லை. கல்வியின் ஒட்டுமொத்த நிலை குறித்து திரிபுரா அரசாங்கத்திற்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் மக்கள் படித்தவர்களாக இருந்தால் விழிப்புடன் இருப்பார்கள். பின்னர் பாஜகவின் அரசியலை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் திரிபுரா அரசு எதிர்காலத் தலைமுறையை மிகவும் திட்டமிட்ட முறையில் அழிக்க விரும்புகிறது. இதன் வெளிப்பாடு தான் தேர்வுக் கட்டண உயர்வு. வேலைவாய்ப்பு என்ற பெயரில் பாஜக அரசு அவ்வப்போது விளம்பரங்களை மட்டுமே வெளியிடுகிறது. ஆனால் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது” என அவர் குற்றம் சாட்டினார். போராட்டம் தொடரும் இந்திய மாணவர் சங்க திரிபுரா மாநிலச் செய லாளர் ஸ்ரீஜன் தேப் “தி வயர்” செய்தியாளரிடம் கூறுகையில், “திரிபுரா அரசாங்கம் விளம்பரத் திற்காக லட்சக்கணக்கில் செலவிடுகிறது. ஆனால் கல்விக்கு பணம் இல்லை. ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக கல்விக்குத் தேவையான பணம் குறையும் என்று பிரதமரும், பாஜக வினரும் மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால் திரிபுரா மாநில அரசு தான் வசூலிக்கும் தேர்வுக் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. துர்கா பூஜையின் போது, கல்வித் துறை மற்றும் பல்வேறு துறைகள் வழியாக மாநிலம் முழுவதும் ஆயி ரக்கணக்கான சுவரொட்டிகளை பாஜக அரசு ஒட்டியது. ஆனால் இப்போது தங்களிடம் பணம் இல்லை என்று கூறி மாணவர்களிட மிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கத் துடிக்கிறது. திரிபுர மாநிலத்தை அரக்க அரசாங்கத்திடமிருந்து காப்பாற்ற இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டம் தொடரும்” என அவர் கூறினார்.
மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்க இந்துத்துவா குண்டர்கள் தீவிரம்
திரிபுராவில் பள்ளி தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), பழங்குடி மாணவர் சங்கம் (டிஎஸ்யு), இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) உள்ளிட்ட மாணவ அமைப்புகள் அக்.,10ஆம் தேதி முதல் திரிபுரா முழுவதும் பள்ளிகளின் வாயிலில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை சீர்குலைக்க ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) குண்டர்கள்,”பள்ளி தேர்வுக் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என போட்டி போராட்டம் நடத்தினர். குறிப்பாக ஏபிவிபி போராட்டம் எஸ்எப்ஐ, டிஎஸ்யு போராட்டக் களத்திற்கு அருகே பதற்றத்தை தூண்டும் வகையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.