states

img

ஊழல், வக்பு பிரச்சனையை மூடி மறைக்கவே பாஜக - திரிணாமுல் கூட்டு வன்முறை

ஊழல், வக்பு பிரச்சனையை மூடி மறைக்கவே  பாஜக - திரிணாமுல் கூட்டு வன்முறை

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் ராமச்சந்திர தோம் குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் மற்றும் சமூக, ஜனநாயக அமைப்புகள் அஹிம்சை வழியில் அமைதியாக  போராட்டம் நடத்தினர். முஸ்லிம் மக்களின் போராட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 11 வரை  4 நாட்கள் முர்ஷிதாபாத் மாவட் lத்தை வன்முறை பூமியாக்கினர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மட்டுமின்றி மால்டா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக - திரிணா முல் காங்கிரஸ் குண்டர்கள் தொ டர்ச்சியாக வன்முறை சம்பவங்க ளில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இளைஞர் உட்பட 3 பேர் பலி யாகினர். காவல்துறையினர், பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த னர். குறிப்பாக வன்முறையின் போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பி லான சொத்துக்கள் (வாகனங்கள் உட்பட) நாசமாகின. இந்நிலையில், ஊழல், வக்பு பிரச்சனையை மூடி மறைக்கவே மேற்கு வங்கத்தில் பாஜக - திரி ணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வன்முறையை அரங்கேற்றி யுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் டாக்டர். ராமச்சந்திர தோம் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திடம் அவர் அளித்த பேட்டியில், “வன் முறையால் பாதிக்கப்பட்ட மேற்கு மாநிலத்தின் முர்ஷிதாபாத் உள் ளிட்ட பகுதிகள் மிகவும் உணர் திறன் மிக்கவை ஆகும். அதனால் வன்முறை சம்பவம் முழுமையாக  மத ரீதியில் பிரித்து திரட்டுதலை உருவாக்குவதற்காகவே தூண்டப் பட்டுள்ளது என தெளிவாக தெரிகிறது. இதன் பின்னால் ஆர்எஸ்எஸ் மற்றும் முஸ்லிம் பிரிவினைவாதிகளின் அரசியல் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணை ந்து வக்பு சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறது. இத்தகைய சூழலில் வன்முறை மூலம் வக்பு சட்டத்தை எதிர்த்து நடந்த போ ராட்டங்கள் திசை திருப்பப் பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான முன்மாதிரியாகும். மம்தா பானர்ஜி சதி முஸ்லிம் மக்கள் கணிசமாக வசிக்கும் மால்டா மற்றும் முர்ஷி தாபாத் போன்ற வங்கதேச எல்லைப்புற மாவட்டங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் சிறுபான்மை பிரிவு மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் வன் முறையை தீவிரப்படுத்தி வரு கின்றன. அடுத்தாண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற வுள்ள நிலையில்,  மேற்கு வங் கத்தில் குழப்பத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிரித்து திரட்டுவதே இந்த வன்முறை சதித்திட்டம் ஆகும்.  குறிப்பாக 26,000 ஆசிரியர்க ளின் வேலைகள் ரத்து செய்யப் பட்ட கல்வித்துறை ஊழல் விவ காரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மாநிலம் முழு வதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கல்வி ஊழல் விவகாரத்தை மூடி மறைக்கவும், அதிலிருந்து மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பான வழியை உரு வாக்குவதற்காகவே திரிணாமுல் காங்கிரஸ் - மாநில நிர்வாகம் வன் முறையை திட்டமிட்டு அரங் கேற்றியுள்ளது.  மேற்கு வங்க காவல்துறை மற்றும் மாநில நிர்வாகம் செய லற்று நிற்க, பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு தீவிர வாத சக்திகளும் சாதாரண மக்க ளின் வாழ்க்கையுடன் விளையாடு வதை அனுமதித்து வருகின்றன. சிபிஎம், இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் மேற்கு வங்க மாநி லத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே ஒற்றுமை யைக் கோரியுள்ளது. தேவைப் படும் போது இராணுவத்தை முன்னி றுத்தவும் வலியுறுத்தப்படுகிறது” என அவர் கூறினார். அமைதி - மத நல்லிணக்க ஊர்வலம்  முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இன்னும் வன்முறை பதற்றம் நீடித்து வரும் சூழலில், அம் மாவட்டத்தில் அமைதி மதநல்லிணக்க ஊர்வலம் நடத்தப் படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்டச் செயலாளர் ஜமீர் மொல்லா அறி வித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,”மேற்கு வங்க மாநில அரசு மற்றும் ஆளும் கட்சி யான திரிணாமுல் காங்கிரஸ், மத்தி யில் ஆளும் பாஜக ஆகியவை முர்ஷிதாபாத் வன்முறையில் ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரி கிறது. மாநில காவல்துறை மற்றும் நிர்வாகம் வன்முறையைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தோல்வியடைந்துள்ளது. முர்ஷிதா பாத் வன்முறைக்கு முக்கியக் காரணமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகியவை ஆகும். வன்முறையில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயி ரிழந்துள்ளனர். இதில் ஒரு சிறு பான்மையின இளைஞன் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். தந்தை மற்றும் மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தர வின் பேரில் முர்ஷிதாபாத் மாவட் டத்தில் துணை இராணுவப் படைகள் முன்னிறுத்தப்பட்டதை வரவேற்கிறோம். ஆனாலும் வன் முறையைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக இராணு வத்தை முன்னிறுத்த வேண்டும். முர்ஷிதாபாத்தில் விரைவில் அமைதி - மத நல்லிணக்க ஊர்வ லங்களை நடத்த சிபிஎம் திட்ட மிட்டுள்ளது. மேலும் மாவட் டத்தின் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளான சுதி, பராக்கா மற்றும் ஜங்கிபூர் உட்கோட்டத்தின் சம்சர்கஞ்ச் தொகுதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியான போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

மேற்கு வங்கத்தில் தீவிரமடையும் போராட்டம்

கொல்கத்தாவிலும் வன்முறை பதற்றம்

வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதி ராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து, மத்திய கொல்கத்தா,  டயமண்ட் ஹார்பர்  என மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வன்முறையுடன் போராட்டம் தீவிர மடைந்துள்ளது.  மத்திய கொல்கத்தாவில் திங்களன்று இரவு இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) சார்பில் வக்பு சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஐஎஸ்எப் தலைவர் நவுஷாத் சித்திக் எம்எல்ஏ  உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பங் கேற்பதற்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் வழிமறித்து,”இந்த கூட்டம் அனுமதியின்றி நடத்தப்படுகிறது” எனக் கூறி திருப்பி அனுப்பினர்.

தெற்கு 24 பர்கானாஸில்  மீண்டும் வன்முறை

 தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போஜர்காட் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து ஐஎஸ்எப் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு ஐஎஸ்எப் தொண்டர்கள் முன்னோக்கிச் செல்ல முயன்ற னர். அப்போது காவல்துறை தடியடி நடத்த, இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  இந்த மோதலில் ஐஎஸ்எப் தொண்டர்கள், காவல்துறையினர் என ஏராளமானோர் காய மடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை யினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் கொல்கத்தா நெடுஞ்சாலையில் பல மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தெற்கு 24 பர்கானாஸில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் கொல் கத்தாவிலும் வன்முறை பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,”பொதுமக்கள் சட்டம்- ஒழுங்கை தங்கள் கையில் எடுக்க வேண்டாம். மதத்தை வைத்து தேவை யில்லாத விளையாட்டுக்கள் விளையாடக் கூடாது மக்கள் அமைதி காக்க வேண்டும்” என கூறியுள்ளார்.