70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை அன்று நடை பெற்றது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் போட்டி யிட்டதன் மூலம், அங்கு மும்முனை போட்டி ஏற்பட்ட நிலையில், வாக்குப்பதிவு முடிவில் தில்லி யில் 60.44% வாக்குகள் பதி வானது. இந்நிலையில், தில்லி சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தபால் மற்றும் முதல் 2 சுற்றுகளில் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் அதன்பின்பு பாஜக, ஆம் ஆத்மியை பின்னுக்குத் தள்ளி 40-க்கும் மேற் பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில் 48 தொகுதிக ளில் வெற்றி பெற்று தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி யை கைப்பற்றியது பாஜக. மூன்றா வது முறையாக ஆட்சியை கைப் பற்றும் முனைப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. காங்கி ரஸ் வழக்கம் போல ஒரு தொகு திகளில் கூட வெல்லவில்லை.
மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்
அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
தேர்தல் முடிவு குறித்து கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ டுவிட் டர் எக்ஸ் பக்கத்தில் வெளி யிட்டுள்ள வீடியாவில்,“மக்க ளின் தீர்ப்பை நாங்கள் பணி வுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்து கள்.தில்லி மக்களின் எதிர்பார்ப் புகளை பாஜக நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் அதிகாரத்துக்காக அர சியலில் இல்லை. மாறாக, மக்க ளுக்கு சேவை செய்வதற்கான ஒரு தலமாகவே நாங்கள் அதிகாரத்தைக் கருதுகிறோம்” என அவர் கூறினார்.
அதிஷி வெற்றி ; கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி
பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை எதிர்த்துப் போட்டி யிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் முதலமைச்ச ருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார். பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே போல் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தோல்வியடைந்துள்ளார். அதேசமயம் கல்காஜி தொகு தியில் போட்டியிட்ட தில்லி முதல மைச்சர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி யே முன்னிலை வகித்து வந்த நிலை யில், இறுதிச் சுற்றுகளின் போது அவர் பின்னடைவைச் சந்தித்துத் தோல்வியடைந்துள்ளார்.
ஆவணங்களை எடுத்துச் செல்லத் தடை
தில்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல பொது நிர்வாகத்துறை தடை வித்துள்ளது. ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குக்கள், மின்னணு கோப்புகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தில்லி யில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பொது நிர்வாகத்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக வெற்றிபெற காரணம் இதுதான்
தில்லி சட்டமன்றத் தேர்த லில் தேர்தல் ஆணைய தரவுகளின்படி பாஜக 45.88% வாக்குகளை பெற் றுள்ள நிலையில், தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 43.62% வாக்குகளையும், காங்கிரஸ் 6.39% வாக்குகளை யும் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி - காங்கி ரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியாக போட்டியிட்டதே பாஜ கவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பது தெரிய வந்துள்ளது.