states

img

கார் முதலமைச்சரின் இப்தார் விருந்தை புறக்கணிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு கலக்கத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி

கார் முதலமைச்சரின் இப்தார் விருந்தை புறக்கணிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்புகலக்கத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி

பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக  ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும், பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பீகார் முதலமைச்சர் சார்பில் ரம்ஜான் மாதத்தின் நோன்பிற்காக இப்தார் விருந்து நடைபெறுவரு வது வழக்கம். இந்த ஆண்டின் இப்தார் விருந்து ஞாயிறன்று மாலை (மார்ச் 23) நடைபெறுவ தாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அலு வலகம் அறிவித்தது. ஆனால் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் இப்தார் விருந்தை பீகாரின் பல முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள் ளன. இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பீகாரில் முத லமைச்சர் நிதிஷ் அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்ய துடிக்கிறது. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி யும் ஆதரவளிக்கிறது. இதனால் அவர் ஏற்பாடு செய்யும் இப்தார் விருந்தை நாங்கள் புறக்கணிக் கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளன. பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே காலம் உள்ள நிலையில், முதல மைச்சர் இப்தார் விருந்தை புறக்கணிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக அறிவித்து இருப்பது பாஜக - ஐக்கிய ஜனதா தளம்  கூட்டணி  கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணிக்கு சாதகமாக அமையும்

பீகாரில் 18% அளவில் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். அதே போல முஸ்லிம் மக்களின் வாக்கு சதவீதமும் 10%க்கும் மேல் உள்ளது. இதனால் பீகார் தேர்தல்களின் வெற்றி, தோல்விக்கு முஸ்லிம் மக்களின் வாக்கு மிக முக்கியமானது ஆகும்.  இத்தகைய சூழலில் வக்பு மசோதா ற்றும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் இப்தார் விருந்தை புறக்கணிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளது பீகார் அரசி யலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப் படுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம், இமாரத்-எ-ஷரியா, ஜாமத்-எ-உலமா ஹிந்த், ஜமாத்-எ- அஹ்லே ஹதீஸ், ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த், கான்கா முஜிபியா மற்றும் கான்கா ரஹ்மானி உள்ளிட்ட 7 மிக முக்கிய முஸ்லிம் அமைப்புகள் இப்தார் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.  முஸ்லிம் அமைப்புகளின் இந்த முடிவு சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும், குறிப்பாக முஸ்லிம் அமைப்புகளின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் கூட்ட ணியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - காங்கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய மெகா  கூட்டணிக்கு வரவிருக்கும் சட்டமன்ற தேர்த லில் சாதகமாக அமையும் என அரசியல் நிபு ணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.