தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அசாம் எம்எல்ஏ கைது
பாஜக ஆளும் அசாம் மாநி லத்தில் “ஆல் இந்தியா யுனைடெட் டெமாக்ரடிக் பிரண்ட்” என்ற கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் அமினுல் இஸ்லாம். இவர் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், “பஹல்காம் தாக்கு தல் ஒன்றிய அரசின் சதி. இந்த தாக்குதல் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் முயற்சி” எனக் கூறினார். இவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலா கியது. ஆனால் ஆளும் பாஜக அரசு, அமினுல் இஸ்லாமின் பேச்சு பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்றும், அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசு கிறார் என்றும் கூறி தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
மே 14ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப் பட்ட அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை ஆதரித்து பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்ய ப்பட்டார். தற்போது அவர் நாகோன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
துருக்கி நிறுவனமான செலிபியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அதானி
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் போது, பாகிஸ் தானுக்கு துருக்கி நாடு ஆதரவு கருத்து தெரிவித்தது. இதனால் ஆப்பிள் இறக்குமதி தடை, சேனல்கள் முடக்கம் என துருக்கி நாடு மீது ஒன்றிய அரசு பல்வேறு பொருளா தாரத் தடைகளை விதித்து வருகிறது. குறிப்பாக துருக்கி நாட்டின் முக்கிய விமான சேவை நிறுவனமான செலிபி நிறுவனத்தின் பாதுகாப்பு ஒப்பந்த அனு மதியை ஒன்றிய அரசு ரத்து செய்தது. இதன் விளைவாகவே செலிபியுடனான ஒப்பந்தத்தை அதானி நிறுவனமும் ரத்து செய்துள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரான அதானிக்குச் சொந்தமான “அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம்” மும்பை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் துருக்கி நிறுவனமான “செலிபி” உடன் தளச் சேவை ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. மேலும் செலிபி நிறுவனம் அதானி கட்டுப்பாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களின் தளச் சேவையை மறைமுகமாக கவனித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. இத்தகைய சூழலில் துருக்கி நிறுவனமான செலிபியுடனான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் ரத்து செய்துள்ளது.
ஆந்திராவிற்கு இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் காலநிலை மாற்றத்தால் கடுமையான வெயில், மேக மூட்டம், சாரல் மழை போன்ற கலவை யான வானிலை நிலவி வருகிறது. கடந்த 4 வார காலமாக ஆந்திர மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் 103 டிகிரி செல்ஸியஸுக்கும் அதிகமான அளவில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வளிமண்டல மேல டுக்கு சுழற்சியால் ஒரே நாளில் ஆந்திரா விற்கு இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக வெளியாகியுள்ள வானிலை அறிக்கையில், “மே 16ஆம் தேதி முதல் ஆந்திராவின் பெரும் பாலான பகுதிகளில் இடி - மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். அதே போல மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா மண்டலங்கள் கவனமாக இருக்க வேண்டும். பலத்த மழை மே 20ஆம் தேதி வரை நீடிக்கும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.