states

img

முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பு வீடியோவை வெளியிட்ட அசாம் பாஜக

முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பு வீடியோவை வெளியிட்ட அசாம் பாஜக

மோடியின் தூண்டுதலால் அடாவடி

கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் அடுத்தாண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை கருத்தில் கொண்டு அசாம் பாஜக மாநில பிரிவு செப்டம்பர் 15 அன்று தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. “பாஜக இல்லாத அசாம்” என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோவில், மாட்டிறைச்சியை சட்டப்பூர்வமாக்குவது குறித்து கூறப்படுகிறது. இறைச்சியை வெட்டும் நபர் தொப்பி (முஸ்லிம் ஆண்) உடன் உள்ளார். அசாம் காங்கிரஸ் தலைவரும், மக்கள வை உறுப்பினருமான கவுரவ் கோகோய், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகி யோரை “பாகிஸ்தானுடன் தொ டர்புடைய கட்சி” என்று அழைப்பது போன்ற படங்கள் உள்ளன. மேலும் அசாமின் தேயிலைத் தோட்டங்கள், கவுகாத்தி விமான நிலையம், கவுகாத்தி அக்கோ லாண்ட், கவுகாத்தி ரங்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆண்கள் தொப்பி அணிந்த மற்றும் பர்தா அணிந்த பெண்களுடன் தொடர்ச்சியான படங்களைக் காட்டுகிறது. சட்டவிரோத குடி யேறிகள் அரசு நிலத்தை கைய கப்படுத்துகிறார்கள் மற்றும் 90% முஸ்லிம் மக்கள்தொகை குறித்து என்று வீடியோவில் காட்டப் பட்டுள்ளது. இறுதியில் “உங்கள் வாக்கை கவனமாகத் தேர்ந்தெ டுங்கள்” என்ற தலைப்புடன் வீடியோ முடிவடைகிறது. செப்டம்பர் 14ஆம் தேதி பிரத மர் மோடி அசாம் மாநிலத்தில் வகுப்புவாத சம்பவங்களால் கொந்தளிப்புள்ள பகுதியான தர்ரங்கிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.  இந்த சுற்றுப்பயணத்தின் போது மோடி,“சட்டவிரோத ஊடுரு வல் மற்றும் எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை சமநிலையை மாற்றும் முயற்சிகள் உள்ளன” என முஸ்லிம் மக்களை மறை முகமாக குறிப்பிட்டு வெறுப்புப் பேச்சை கக்கினார். அடுத்த ஒரே நாளில் (செப்., 15) முஸ்லிம்  மக்களுக்கு எதிரான இந்த வீடி யோவை பாஜக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டுகொள்ளாத  தேர்தல் ஆணையம் இந்த வெறுப்பு வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட பொழுதிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் மதத்திற்கான முறையீடுகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் கீழ் விதிமீறியவை என்பது குறிப்பிடத்தக்கது.