states

img

மணிப்பூரில் மீண்டும் ஆர்பிஜி ராக்கெட் பறிமுதல்

மணிப்பூரில் மீண்டும் ஆர்பிஜி ராக்கெட் பறிமுதல்

ஆளுநரின் போலிச் செய்திகள் அம்பலம்

மணிப்பூரின் சண்டேல் மாவட் டத்தில் உள்ள இந்தியா - மியான் மர் எல்லையருகே 3 நாட்களுக்கு முன் பாதுகாப்புப் படைகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப் பட்ட 10 பேரும் வன்முறையாளர்கள்தான் என உறுதியான அளவில் இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் நடந்து 2 நாட்களுக்குப் பிறகு,  அதாவது வெள்ளிக்கிழமை முதல் தான் கொல்லப்பட்டவர்களின் உடல் அடை யாளம் காணும் பணிகள் தொடங்கிய தாக தேசிய பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி (NDPRO) தெரிவித்தார்.  இந்நிலையில், கொல்லப்பட்ட 10 பேரிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மற்றும் ஒரு ராக்கெட் உந்து கிரெனேட் (ஆர்பிஜி - RPG) ஆகிய வற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி மூலம் செய்திகள் வெளி யாகின. இந்த தகவல் கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. காரணம் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஒரு  சில வாரங்களிலேயே, மாநிலத்தில் வன் முறையாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் ராணுவ ஆயுத கிடங்குகளிலிருந்து காணாமல் போன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள தாக ஆளுநர் அஜய் குமார் பல்லா மூலம் செய்திகள் வெளியாகின.  மேலும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் மணிப்பூரில் ஆயுதத் தாக்குதலுடன் நிகழும் வன்முறை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஆர்பிஜி ராக்கெட் உந்து போன்ற பயங்கரமான ஆயுதக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம், இன்னும் மாநிலத்தில் ஆயுதம்  புழக்கத்தில் இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவிற்கு நெருக்கமான ஆளுநர் அஜய்  குமார் பல்லாவின் போலிச் செய்தி களும் அம்பலமாகியுள்ளன.