states

img

பேருந்து - ஆட்டோ மோதி 6 பேர் பலி

பேருந்து - ஆட்டோ மோதி 6 பேர் பலி

குஜராத்தில் கோர விபத்து

கஜராத் மாநிலம் படான் மாவட் டத்தில் சமி கிராமத்தில் சமி-ராதன்பூர் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அன்று காலை 11:30  மணியளவில் அரசு பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதியது.  இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ திசை  மாறி, எதிர்ப்பக்கம் வந்ததன் காரணமா கவே இந்த விபத்து நிகழ்ந்ததாக படான்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.கே. நயி செய்தியாளர்களிடம் கூறி னார்.