திருவனந்தபுரம் உலகின் பிரசித்தி பெற்ற கோ வில்களில் ஒன்றான சபரி மலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கிய நிகழ்வான மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 16ஆம் தேதி தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ஆம் தேதி அன்று நிறைவுபெற்றது. அடுத்த 3 நாட்களுக்குப் பிறகு மகரவிளக்கு கால பூஜைக ளுக்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை யும், மகரஜோதி தரிசனமும் நடை பெற்றன. சனிக்கிழமை மண்டல, மகரவிளக்கு கால நெய் அபிஷே கம் நிறைவடைந்தது.
நடை அடைப்பு
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனு மதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழ மை இரவு பக்தர்கள் யாரும் சபரி மலையில் தங்க அனுமதிக்கப்பட வில்லை. திங்களன்று அதிகாலை 6.30 மணியளவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை சாத்தினார். நடை சாத்திய பின்னர் கோவில் சாவி யை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி பந்தளம் மன்னர் பிரதிநிதி யிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்கு சபரி மலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவி யை மேல்சாந்தியிடம் மன்னர் பிரதிநிதி திரும்ப ஒப்படைத்தார். மீண்டும் மாசி மாத பூஜைக ளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்படும் என்பது குறிப் பிடத்தக்கது.
10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக...
நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சபரி மலை ஐயப்பன் கோவிலில் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர் கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 10 லட்சம் கூடுதலான அளவில் சபரிமலையில் தரி சனம் செய்துள்ளனர். குறிப்பாக கடந்த சீசன்களை விட அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்தாலும் இடது ஜனநாயக முன் னணி ஆளும் கேரள மாநில அர சின் அசத்தலான செயல்பட்டால் சாதாரண கூட்ட நெரிசல் கூட ஏற் படாமல் மிகுந்த பாதுகாப்பாக சபரி மலையின் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவுபெற்றன. ஆந்திர பாஜக கூட்டணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ஏற்பட்டது போல் அல்லாமல், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பாது காப்பான ஏற்பாடுகளை செய்த கேரள அரசுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் சமூகவலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு பாராட்டு
இதுதொடர்பாக சபரிமலை யில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறு கையில்,”சபரிமலையில் எதிர் பார்த்ததை விட அதிகமாக பக்தர் கள் வந்த போதிலும் காவல்துறை யின் சிறப்பான நடவடிக்கைக ளால் நெரிசல் ஏற்படாமலும், நீண்ட நேரம் காத்திருக்காமலும் பக்தர் கள் மிக எளிதில் தரிசனம் செய்து திரும்பினர். ஜனவரி 18ஆம் தேதி வரை 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட இம்முறை 10 லட்சத்திற்கும் அதிகமான பக் தர்கள் சபரிமலை வந்துள்ளனர். சபரிமலை கோவில் வருமானமும் இந்த வருடம் அதிகரித்துள்ளது” என அவர் கூறினார்.