states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கண்ணி வெடியில் சிக்கி  3 காவல் அதிகாரிகள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது தெலுங்கானா மாநி லத்தின் முலுகு மாவட்டம். இது அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த பகுதி யில் வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் தெலுங்கானா காவல்துறை யினர் வெடிகுண்டுகளைக் கண்டறியும் சோ தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வஸீது காவல் நிலையத்தின் எல்லைக்குட் பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோத னையில், அங்கு மாவோயிஸ்டுகள் நிறுவி யிருந்த ஐஈடி எனப்படும் நவீன கண்ணி வெடி வெடித்து சிதறியது. இதில், 3 காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து :

 5 பேர் பலி உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கங்கோத்ரி கோவிலுக்கு 6 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் வியாழக் கிழமை அன்று காலை விபத்துக்குள்ளா னது. விபத்தில் 5 பேர் பலியானதாகவும் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கர்வால் கோட்ட ஆணையர் வினய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.