“ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கொல்ல முயற்சி”
பீகார் மாநிலத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - காங்கிரஸ் - இடதுசாரிக் கட்சிக் கூட்டணியில் முதல மைச்சாராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் திடீ ரென விலகி பாஜக கூட்டணியில் இணை ந்து, மீண்டும் முதலமைச்சாரானார். இதனால் ஆர்ஜேடி - ஜேடியு ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கடுமை யான அரசியல் மோதல் நிலவி வரு கிறது. குறிப்பாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது ஒன்றிய மற்றும் மாநில விசாரணை அமைப்புக ளின் நடவடிக்கைகள் தீவிரமடைந் துள்ளன. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை களுக்கு இடையே பீகார் முன்னாள் முத லமைச்சரும், லாலு பிரசாத்தின் மனைவி யுமான ராப்ரி தேவி தனது மகனும், முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாட்னாவில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”தேஜஸ்வியை 4 முறை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. எங்களது குடும்பத்திற்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப் பட்டு வருகிறது. தேஜஸ்வி துணை முதல மைச்சராக இருந்தபோது, அவரது உணவில் விஷம் கலக்க முயற்சி நடந்தது. தற்போதுள்ள நிதிஷ் குமார் அரசுதான் இந்த சதிக்குப் பின்னால் இருக்கிறது. எனது மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு நிதிஷ் குமார் அரசு தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.