states

img

பீகாரில் ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி!

எஞ்சினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சனிக்கிழமை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது இரண்டுக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.