states

img

2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள் கிடையாது... அசாம் பாஜக அரசு மீண்டும் தடாலடி....

கவுகாத்தி:
“இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் இனிமேல் அரசு வேலைகள், சலுகைகளைப் பெற முடியாது!” என்று அசாம் மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டும் இதேபோன்ற அறிவிப்பை செய்திருந்த பாஜக அரசு, கடும் எதிர்ப்புகாரணமாக அதிலிருந்து பின்வாங்கியது. ஆனால், 2 குழந்தைகள் விவகாரத்தை மீண்டும்தற்போது கையில் எடுத்துள் ளது.“இரு குழந்தைகள் உள் ளோருக்கு மட்டுமே ஒரு சிலஅரசுப் பணிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். சிறிது சிறிதாகஇந்த விதியை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாநிலத்தில் மக்கள் தொகைஅதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்” என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.இதனிடையே அசாம் பாஜகஅரசின் இந்த தடாலடிக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 5 பேருடன்பிறந்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2 குழந்தைகள் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியிருக்கும் அவர்கள், சிறுபான்மை முஸ்லிம் மக்களைக் குறிவைத்தேஇந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை என்று பகிரங்கமாகவேஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக் கது.