பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அசாம் கால்நடை பாதுகாப்பு சட்டம் 2021-இன் படி, கோயில்கள் மற்றும் இந்துகள் வசிக்கக்கூடிய இடத்தில் இருந்து 5 கிமீ தூரம் வரை மாட்டிறைச்சியை விற்வோ, மாட்டிறைச்சியுடன் பயணிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அசாம் மாநில முழுவதும் உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.