states

img

ஹரியானாவில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்

10 மக்களவை தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநி லத்தில் மே 25 அன்று (ஆறாம்  கட்டம்) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், அம்  மாநிலத்தில் “இந்தியா” கூட்டணி  மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறது. ஆனால் ஹரியானாவை ஆளும் பாஜக வேட்பாளர்களோ விவசாயிகளுக்கு பயந்து தேர் தல் பிரச்சாரக் களத்திலேயே இல்  லாமல், வீடு மற்றும் கட்சி அலுவல கத்திலேயே முடங்கிக் கிடக்கின்ற னர். பாஜக வேட்பாளர்கள் மட்டு மின்றி ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா, ஹரியானா முன் னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் ஆகியோர் பிரச்சாரக் கூட்  டங்களை ரத்து செய்து ஓட்டம் பிடித்துள்ளனர். 

இந்நிலையில், ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளரான ரன்தீப் சிங்  சவுதாலா தேர்தல் பிரச்சாரம் செய்த தேவா கிராமத்தில் டிராக்டர்களு டன் பேரணி நடத்திய விவசாயி களிடம் சிக்கி சிறைபிடிக்கப்பட் டார். “எங்களை தாக்கிவிட்டு, எதற்கு  இங்கு வந்து பிரச்சாரம் செய்கி றீர்கள்?” என்ற கோஷத்துடன் நூற்  றுக்கணக்கான விவசாயிகள் டிராக்  டர்களுடன் வட்டமடித்து கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். 

மேலும் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக முழக்கங் களை எழுப்பினர். அத்துடன் ஒன்  றிய-மாநில பாஜக அரசுகளின் விவ சாயிகளுக்கு எதிரான கொள்கை கள் குறித்த விவசாயிகள் சரமாரி யாக கேள்விகள் எழுப்பினர். ஆனால் பாஜக வேட்பாளர் ரன்தீப்  சிங் பதிலளிக்க மறுத்துவிட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரன்தீப் சிங் மாற்றுப்பாதை யில் ஓட்டம் பிடித்தார். 

ஏற்கெனவே தயா கிராமத்தி லும் ரன்தீப்புக்கு எதிராக கருப்புக்  கொடி காட்டி போராட்டம் நடத் தப்பட்டது. விவசாயிகளிடம் பகி ரங்கமாக மன்னிப்புக் கேட்டதன் மூலம் ரன்தீப் கிராமத்தை விட்டு  வெளியேறினார் என்பது குறிப்பிடத்  தக்கது.

கேரளாவைப் போல ஹரியானாவிலும் பாஜக பூஜ்ஜியத்தை பெறும்
பாஜக வேட்பாளர்களுக்கு எதி ராக போராட்டம் நடத்த விவசாயி கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சம்பவ இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பேரணி, முற்றுகை, டிராக்டர் பேரணி என வியூகம் அமைத்து பாஜகவை பந்தாடி வருகின்றனர். இதனால் பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள முடியா மல் அடிமேல் அடி வாங்கி வருகின்றனர். 

இந்நிலையில், ரன்தீப்பிற்கு எதி ரான போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகளின் தலைவர் சத்யதீப் கூறுகையில், “ஹரியானாவில் பாஜகவின் கதையை முடித்து விடுவோம். கேரளத்தைப் போல  ஹரியானாவிலும் பாஜக வெல்லும்  இடங்களின் எண்ணிக்கை பூஜ்ஜிய மாக இருக்கும்” என கூறினார்.

பயத்தில் 40 வாகனங்களுடன் பறக்கும் பாஜக வேட்பாளர்கள்
விவசாயிகள் தாக்கிவிடுவார் களோ? என்ற அச்சத்தில் ஹரி யானாவில் ஒவ்வொரு பாஜக வேட்  பாளர்களும், ஒரு மாநில முதல்வ ருக்கு கூட இல்லாத வகையில்  40க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரத்துக்குச் செல்கின்றனர். அவற்றில் 10 வாகனங்கள் காவல்  துறையைச் சேர்ந்தவை என்ற நிலை யில், பாஜக வேட்பாளர் சென்ற டைய வேண்டிய இடங்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே காவல்துறையினர் சென்றடைவர். எதிர்ப்பு இல்லாவிட்டால்தான் பாஜக வேட்பாளர் வருவார். இல்லையெனில் நிகழ்ச்சி ரத்து  செய்யப்படும் என்று தேசாபிமானி  செய்தியாளர் கோபி குறிப்பிட்டுள்ளார்.

;