ஸ்ரீநகர், டிச.23- ஜம்மு-காஷ்மீரில் மெர்ஜான்போராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர், பொதுமக்ள் இருவர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஜ்பெஹாரா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முஹமது அஷ்ரஃப் கொல்லப் பட்டார். பொதுமக்கள் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். இதை காஷ்மீர் மண்டல காவல்துறை உறுதி செய்துள்ளது.