லக்னோ அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், பதவி விலகக் கோரியும் வியாழக்கிழமை (டிசம்பர் 19) நாடாளு மன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி எம்.பி., க்கள் போராட்டம் நடத்தினர். இந்த போ ராட்டத்தை சீர்குலைக்கவும் மற்றும் அமித் ஷாவை காப்பாற்றும் நோக்கத்திலும் போட்டிப் போராட்டம் நடத்திய பாஜக எம்.பி.,க்கள், “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டு லேசான அளவில் காயமடைந்தனர்.
பாஜக எம்.பி., முகேஷ் ராஜ்புத் காயம் இல்லாமல் கவலைக்கிடமாகவும், மற்றொரு பாஜக எம்.பி., சாரங்கிக்கு கண்ணில் ஏற்பட்ட சிராய்ப்பிற்கு தலைமுழுவதும் கட்டு போட்டும் தில்லி ராம் லோகியா மருத்துவமனையில் நாட கத்தை நிகழ்த்தினர். அதே போல ராகுல் காந்தி தன்னை தாக்க முயன்றதாக பாஜக பெண் எம்.பி., கோன்யாக்கும் பொய்களை கட்ட விழ்த்து விட்டார்.
இந்நிலையில், எனது திரை வாழ்வில் பார்த்திராத வகையில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.,க்கள் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தினர் என சமாஜ்வாதி எம்.பி.,யும், முன்னாள் திரைக்கலைஞருமான ஜெயா பச்சன் கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,”பாஜக எம்.பி.,க்கள் சாரங்கி, முகேஷ், கோன்யாக் ஆகிய 3 பேரின் சிறந்த நடிப்பை நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. நடிப்பில் அவர்களுக்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நுழைய விடாமல் எங்களை (“இந்தியா” கூட் டணி) பாஜக எம்.பி.,க்கள் தான் தடுத்தனர். அத னால் தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு நான் சாட்சி. மற்றபடி பாஜகவினர் கூறியது போல ராகுல் காந்தி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி யாரும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் மீது தாக்கு தல் நடத்தவில்லை” என அவர் கூறினார்.
பாஜகவிற்கு எம்விஏ கூட்டணி எச்சரிக்கை
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அமித் ஷாவிற்கு எதிரான போராட்டத்தின் மீது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜகவினர் சூறையாடினர். இந்தத் தாக்குதலை கண்டித்து மகாராஷ்டிர எதிர்க்கட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி (காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்)) போராட்டம் நடத்தியது. இந்த போராட் டத்தின் பொழுது எம்விஏ கூட்டணி தலைவர் கள்,”நாங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போ ராடியவர்கள். அதே போல் பாஜக குண்டர்களை யும் எதிர்கொள்வோம். எதற்கும் அஞ்ச மாட் டோம்” என பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கர்நாடகாவிலும் பாஜக மருத்துவக் கட்டு நாடகம்
கர்நாடக சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான டிசம்பர் 19ஆம் தேதி, சட்ட மேலவையில் (பெலகாவியில்) பாஜக உறுப்பினர் சி.டி.ரவி, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்றம் சி.டி. ரவிக்கு சனிக்கிழமை அன்று ஜாமீன் வழங்கியது. கைது செய்த பின் கர்நாடக காவல்துறை தன்னை தாக்கியதாக சி.டி.ரவி தலையில் மருத்துவக்கட்டுடன் வலம் வருகிறார்.
\நாங்கள் விசாரணையை கூட தொடங்கவில்லை. அதற்குள் ஜாமீன் பெற்று ஓட்டம் பிடித்தார் என கர்நாடக காவல்துறை கூறியுள்ளது.
இத்தகைய சூழலில் சி.டி.ரவியின் மருத்துவக்கட்டு போலியானது என சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அமித் ஷாவை காப்பாற்ற பாஜக எம்.பி.க்கள் போட்ட மருத்துவக் கட்டு நாடகத்தைப் போல, கர்நாடகத்திலும் பாஜக மேலும் ஒரு மருத்து வக் கட்டு நாடகத்தை நிகழ்த்தியுள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.