states

img

மே.வங்க ரயில் விபத்து: மோடி அரசுக்கு கார்கே கேள்வி

தில்லி,ஜூன் 18- மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் சரக்கு ரயில் மோதிய விபத்தில் நரேந்திர மோடி அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏழு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த விபத்தை குற்றவியல் அலட்சியம் என நரேந்திர மோடி அர சாங்கம் குறிப்பிட்டதை தொடர்ந்து அவர் இக்கேள்விகளை எழுப்பி யுள்ளார். மேலும் இந்த விபத்திற்கு பொறுப்பேற்பது யார்? நீங்களா, இல்லை ரயில்வே துறையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

1) பாலாசோர்  போன்ற ஒரு மோசமான ரயில் விபத்திற்குப்  பிறகு  , அதிகம்  விளம்பரப்படுத்தப்பட்ட “கவாச்”  பாதுகாப்பு ஏன் ஒரு கிலோமீட்டர் கூட முறையாக அமைக்கப்பட வில்லை?

2)    ரயில்வே துறையில்  ஏன் கிட்டத்தட்ட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அவை  ஏன் நிரப்பப்படவில்லை?

3) தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022 அறிக்கையின்படி, 2017 முதல்  2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சுமார் 1,00,000 பேர் ரயில் விபத்து களில் இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதற்கு யார் பொறுப் பேற்கப் போகிறீர்கள்?

    தொழிலாளர் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் வேலை செய்வதே விபத்துக்கள் அதி கரித்து வருவதற்கு முக்கியக் காரணம் என்று ரயில்வே துறையே சமீ பத்தில் ஒப்புக்கொண்டது. பிறகும்  ஏன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன?

4)  ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (CRS) பரிந்துரைகளுக்கு ரயில்வே  வாரியம் காட்டிய “அலட்சியப்போக் கிற்காக  நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323 ஆவது அறிக்கையில் ரயில்வே துறையை விமர்சித்துள் ளது. 8-10 சதவீதம் விபத்துகளை மட்டுமே ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது என்று அது தெரிவித்துள்ளது.  ஏன்  ரயில்வே  பாதுகாப்பு ஆணையம் இதுவரை பலப்படுத்தப்படவில்லை?

5) சிஏஜி  தகவலின்படி, ‘ராஷ்ட்ரிய ரயில் சுரக்ஷா கோஷ்’ (RRSK) நிதியில் 75 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏன் நிதி குறைக்கப்பட்டது?  அதே  நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வேத்துறைக்கு ரூ.20,000 கோடி வழங்கப்படுகிறது. இந்த  பணத்தை ரயில்வே அதிகாரிகள் தேவையற்ற செலவுகள் மற்றும் ஆடம்பர வசதிகளுக்காக ஏன் பயன்படுத்துகிறார்கள்?

6) சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வது ஏன் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது? ஸ்லீப் பர் கோச்சுகளின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?     ரயில் பெட்டிகளில் “அதிகக் கூட்டம்  ஏறுவதை கட்டுப்படுத்த காவல்துறை யைப் பயன்படுத்துவதாக ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.  ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்ற மோடி அர சாங்கத்தின் முடிவின் காரணமாக   கடந்த ஆண்டு 2.70 கோடி பேர் இருக்கைகள் கிடைக்காததால் தங்களுடைய  டிக்கெட்டுகளை ரத்து  செய்ய வேண்டிய நேரடி விளைவு உருவானது, அவருக்குத் தெரி யாதா?

7)    இதுபோன்ற நேரத்தில் பதில் சொல்லாமல் தப்பிக்கத்தான் 2017-18 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டை மோடி அரசாங்கம் பொது பட்ஜெட்டுடன் இணைத்ததா?

இதற்கு மோடி அரசு பொது மக்களுக்கு பதில்  சொல்ல வேண்டும் என ஏழு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாலாசோர் ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. அப்போது கவாச்  தொழில்நுட்பக் குறைபாடு குறித்து பெரும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அதன் பிறகும் கூட ரயில்  விபத்துக்களை தடுக்கும் வகையில் கவாச்  அமைப்பை பொருத்துவதில் முழுமையான வேகத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு  காட்டவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

;