states

img

மேற்கு வங்கத்தில் வன்முறை - 11 பேர் பலி; வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, வெடித்த வன்முறையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து சமிதி, 928 ஜில்லா பரிஷத் பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கூச்பெகார் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வன்முறையில் வாக்குச்சீட்டுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. அதேபோல், வாக்குச் சாவடிக்கு தீ வைப்பு, வாக்குச் சீட்டுகள் சூறையாடல், நாட்டு வெடிகுண்டு வீச்சு, கும்பல் தாக்குதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏராளமானோர் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளன. தொடர் பதற்றம் காரணமாக மேற்குவங்கத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.