states

img

விஜய் மல்லையா, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோட மத்திய அமைப்புகளே காரணம்

நாட்டுக்கே அன்னம் அளிக் கும் விவசாயிகள் சில ஆயிரம் ரூபாய் கடனுக் காக தற்கொலை செய்துகொள் வதும், கல்விக்கடன் நெருக்கடி யால் மாணவர்கள், பட்டதாரிகள் வாழ்வில் கடுமையான நெருக்க டியை எதிர்கொள்வதும், தவணை தவறியதற்காக கடன் வாங்கியவர் குடும்பத்தினரை வங்கிகள் வீட் டிற்கே சென்று மிரட்டுவதும் நாட் டின் மிக முக்கியமான நிகழ்வுக ளாக உள்ளன. இந்நிகழ்வுகள் இல் லாமல் ஒருநாள் பொழுது சாய்ந்த தாக வரலாறு இல்லை. நாள்தோ றும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக மக்கள் படாதபாடு படுகின்றனர். கடன் - வங்கி - பொதுமக்கள் பிரச் சனை என்ற பெயரில் செய்தி இல் லாமல் செய்தித்தாள் இல்லாத சூழல் கூட உள்ளது.

ஆனால் வங்கிகளில் பல ஆயி ரம் கோடி வாங்கி மோசடி செய்து, கடனை திரும்பச் செலுத்தாமல் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு ஓடி, வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். மேலும் தங்களது பணபலத் தால் இந்திய விசாரணை அமைப்பு களின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, வெளிநாடுகளில் இருந்த படியே இந்திய நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளிலும் ஈடு பட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறைக்கு குட்டு

இந்நிலையில், பணமோசடி வழக்கு ஒன்றின் விசாரணையின் பொழுது,”விஜய் மல்லையா, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி யோட மத்திய அமைப்புகளே கார ணம்” என மும்பை சிறப்பு விசா ரணை நீதிமன்றம் குற்றம்சாட்டி யுள்ளது. சட்டவிரோத பணப்பரி வர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளிநாடு செல்ல நீதிமன் றத்தின் முன்அனுமதி பெறுவதற் கான ஜாமீன் நிபந்தனையை கைவிடக் கோரி மனுத்தக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே இது தொடர்பாக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட் டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் கோன்சால்வ்ஸ்,”வியோமேஷ் ஷாவின் மனுவுக்கு அனுமதி வழங் குவது நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி போன்ற முந்தைய சூழ்நிலைகளு க்கு வழிவகுக்கும்” என வாதிட்டார்.

அமலாக்கத்துறை வாதத்தை நிராகரித்த நீதிபதி,”சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்யாததால், நீரவ் மோடி, விஜய் மல்லையா தப்பி ஓடினர்  என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சம்மனுக்கு முறையாக வியோமேஷ் ஷா பதிலளித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜரான தோடு, ஜாமீன் பெற்று வெளிநாடு செல்ல பலமுறை விண்ணப்பித் துள்ளார். வியோமேஷ் ஷாவின் வழக்கை நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்களின் வழக்குகளுடன் ஒப்பிட முடியாது” என கூறினார். 

அதாவது இந்திய பொ துத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிய பெருமுதலை கள் வெளிநாடுகளுக்கு தப்பி யோடுகின்றன. இவற்றின் மத்தி யில் விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய் யாததே அவர்கள் தப்பியோடக் காரணம் என மும்பை சிறப்பு  நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ் பாண்டே நேரடியாக குற்றம் சாட்டி யுள்ளார். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டேவின் இந்த கருத்துக்கு அமலாக்கத் துறை பதில் கருத்து எதுவும் தெரி விக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 

;