states

img

மபி: சிறார் காப்பகங்களில் உணவில் முட்டை, இறைச்சி அனுமதிக்கப்படாது - மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா

மத்தியப் பிரதேசத்தில் சிறார் காப்பகங்களில் உணவு பட்டியலில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க அனுமதிக்கப்படாது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில், சிறார் காப்பகங்களுக்கான உணவுப் பட்டியலில்  முட்டையும், இறைச்சியும் வழங்கப்படும் என்று அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, அம்மாநில எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு குறித்து மாநில உள்துறை அமைச்சர் மிஸ்ராவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "இது மத்தியப் பிரதேசத்தில் அனுமதிக்கப்படாது. இதில் ஏதோ குழப்பம் உள்ளது. மாநில அரசிடம் அத்தகைய திட்டம் எதுவும் நிலுவையில் இல்லை, அது செயல்படுத்தப்படாது" என்று தெரிவித்துள்ளார்.

;