போபால், டிச.15- மேடை நகைச்சுவை நிகழ்ச்சி கள் மூலம் பிரபலமானவர்கள் குணால் கம்ரா மற்றும் முனவர் பரூக்கி. இந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் நகைச் சுவை செய்வதாக கூறி கடந் தாண்டு பரூக்கி கைது செய்யப்பட் டார். அதன்பின், அவரது நிகழ்ச்சி களுக்கு பாஜக ஆளும் மாநிலங் கள் தடை விதித்தன. இதனால் ஒரே ஆண்டில் முனவர் பரூக்கி யின் 12 நிகழ்ச்சிகள் ரத்தாகின. கடைசியாக பெங்களூரு மேடை நிகழ்ச்சியும் தடுத்து நிறுத்தப்பட் டது. இதையடுத்து, ‘வெறுப்பு வென்றது; கலைஞன் தோன் றான்’ டுவிட்டரில் பதிவிட்ட பரூக்கி, அதன்பின் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை. இதேபோல ஒன்றிய அரசின் பணமதிப்பு நீக்கம் துவங்கி பல் வேறு பிரச்சனைகளிலும் மோடி அரசை விமர்சித்து வரும் குணால் கம்ராவின் நிகழ்ச்சிகளை யும் பாஜகவினர் நடத்த விடாமல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ம.பி. மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். “குணால், முனவர்... உங்களுக் காக நான் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறேன். அனைத்து பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஒரே ஒரு நிபந்தனை தான்... நகைச்சுவை திக்விஜய் சிங்கை பற்றியே இருக்க வேண்டும். சங்கீஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.. பயப்பட வேண்டாம். நிகழ்ச்சிக்கான இடம் மற்றும் நேரத்தை நீங்களே தேர்வு செய் யுங்கள். உங்களின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக் கொள் ளப்படுகிறது” என்று அதில் குறிப் பிட்டிருந்தார். இந்த பின்னணியிலேயே, செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்கு பதிலளித்துள்ள நரோட்டம் மிஸ்ரா, “மத்தியப் பிரதேசத்தில் இந்துக் கடவுள்களை அவமதித்து ஏதேனும் நிகழ்ச்சி நடத்தப்பட் டால், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கிடைக்கும் இடம் சிறைச்சாலை தான். சமூகத்தின் எந்தப் பிரிவின ரின் உணர்வுகளோடும் யாரும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மிரட்டல் விடுத் துள்ளார்.