போபால், ஜூலை 8- மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த தொழிலாளி தஷ்மத் ராவத் மீது, பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவேஷ் சுக்லா, மனிதத் தன்மையற்ற வகை யில் சிறுநீர் கழித்த கொடுமை நாட்டையே வெகுண்டெழச் செய்தது. பிரவேஷ் சுக்லா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் வரவுள்ளதால், இந்த விவகாரம் பாஜக வுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்று கருதிய முதல் வர் சிவராஜ் சிங் சவுகான், பிரவேஷ் சுக்லா மீது தேசி யப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத் தரவிட்டார். அத்துடன், இந்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாக எடுத்துக் கொள் கிறது என்பதை ஊருக்குக் காட்டுவதற்காக, ஆதித்ய நாத் அரசாங்கத்தின் உ.பி. மாடலைக் கையில் எடுத்தார். குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனைப் பெற்றுத் தரு வதை விட்டுவிட்டு, அவர் களை என்கவுண்ட்டர் செய் வது, அவர்கள் குடியிருக் கும் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது ஆதித்ய நாத் அரசாங்கத்தின் நடை முறையாகும். இதனைக் காப்பியடித்த ம.பி. பாஜக அரசாங்கத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவு கான், சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டி யிருந்தார் என்ற காரணத் தைக் கூறி, பிரவேஷ் சுக்லா வசித்து வந்த வீட்டை புல்டோ சர் மூலம் இடித்துத் தள்ளி னார். பழங்குடியினருக்காக தனது அரசு எதை வேண்டு மானாலும் செய்யும் என்று காட்டிக் கொண்டார்.
இந்நிலையில்தான், குற்றவாளி பிரவேஷ் சுக்லா ‘பண்டிட்’ எனும் பிரா மணர் சமூகத்தைச் சேர்ந்த வர் என்பதால் அவருக்கு ஆதரவாக பிராமணர் சங் கம் களத்தில் குதித்துள் ளது. பிரவேஷ் சுக்லாவின் வீட்டை இடித்ததற்கு ‘அகில பாரதிய பிராமின் சமாஜ்’ என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலை வர் பண்டிட் புஷ்பேந்திர மிஸ்ரா, பிடிஐ செய்தி நிறு வனத்திற்கு பேட்டி அளித் துள்ளார். அதில், பிரவேஷ் சுக்லா வின் வீடு இடிக்கப்பட்ட தற்கு எதிராக மத்தியப் பிரதேச மாநில உயர்நீதி மன்றத்தை நாட உள்ளோம். குற்றம் சாட் டப்பட்டவரின் குடும்பத் துக்கு முழு உதவி செய் வேன் என உறுதியளிக்கி றேன். பிரவேஷ் சுக்லாவின் செயலை யாராலும் ஏற் றுக்கொள்ள முடியாது. அவ ரது செயல் மிகவும் கண் டிக்கத்தக்கது. இருப்பினும் அவர் செய்த செயலுக்காக மற்றவர்களை தண்டிப்பது சட்டப்படி சரியா?. ஏனென் றால் இடிக்கப்பட்ட வீடு என்பது பிரவேஷ் சுக்லாவின் தந்தை ராமகாந்த் சுக்லா வுக்கு சொந்தமானது. தற் போது வீடு இடிக்கப்பட்டுள் ளதால் அவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்” என கூறியுள் ளார். மேலும் வீட்டை இழந்து தவிக்கும் பிரவேஷ் சுக்லா வின் குடும்பத்துக்கு உதவி செய்யுமாறு, ஒவ்வொரு மாவட்ட பிராமணர் சங்கத் தலைவர்களுக்கும் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதன்படி சித்தி மாவட்ட தலைவர் ராகேஷ் துபே தலைமை யிலான நிர்வாகிகள் பிர் வேஷ் சுக்லாவின் குடும்பத்தி னரைச் சந்தித்து ரூ. 51 ஆயி ரம் வழங்கி உள்ளனர்.