states

img

மத்திய பிரதேசத்தில் தலித் இளைஞர்களை மலம் திண்ண வற்புறுத்திய 7 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர்களை மலம் திண்ண வற்புறுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட குடும்பத்தினர் 7பேர் கைது செய்யப்பட்டதுடன்,அவர்களது வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து கடந்த புதன்கிழமை போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஷிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுவன்ஷ் சிங் பட்டோரியா கூறியதாவது, ஷிவ்புரி மாவட்டம், வர்காதி கிராமத்தை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு தலித் இளைஞர்கள், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணிடம் போனில் பேசினர்.

இதையடுத்து, அந்த குடும்பத்தினர் அந்த தலித் இளைஞர்களை கடந்த ஜூன் 30-ஆம் தேதி வீட்டுக்கு வரவழைத்து கொடூரமான முறையில் தாக்கியத்துடன், மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த இளைஞர்களுக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை தலித் இளைஞர்களை வன்கொடுமை செய்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை புதன் கிழமை கைது செய்தது.அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களின் மீது வன்கொடுமை பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு ரகுவன்ஷ் சிங் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினர் ஒருவர் மீது பாஜக நிர்வாகி பிரவீன் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சில தினங்களுக்குள் தலித் இளைஞர்களை மீது மீண்டுமொரு வன்கொடுமை தாக்குதல் நடத்தப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;