states

கலவரக்காரர்களுக்கு மணிப்பூரில் பதிலடி; இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோல்வி

இம்பால், ஜுன் 4- 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மணிப்பூரில் உள்ள மக்கள் அகதிகள் முகாம்களில் காத்திருக்க வேண்டியிருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்த சில மணி நேரங்களிலேயே மணிப்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அர சுக்கு எதிரான மனநிலையை காண முடிகிறது. மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் செயல்பாடு அதைக் காட்டுகிறது. 

இரு மக்களவைத் தொகுதிகளி லும் தேசியஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.

இன்னர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் 67,211 வாக்குகளிலும், அவுட்டர் மணிப் பூரில் ஆல்பிரட் கங்கம் எஸ்.ஆர்தர் 22,302 வாக்குகளிலும் முன்னிலை பெற்றிருந்தனர். இன்னர் மணிப்பூ ரில் பாஜகவும், அவுட்டர் மணிப்பூரில் அதன் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணியும் போட்டியிடு கின்றன. 2019 மக்களவைத் தேர்த லில், பாஜக 34.3 சதவிகித வாக்கு களையும், நாகா மக்கள் முன்னணி 22.6 சதவிகித வாக்குகளையும் பெற்ற தொகுதிகளில் இந்தியா முன்னணி இந்த முன்னேற்றத்தை அடைய முடிந்தது.

பாதுகாப்பின்மையில் மூழ்கி யிருக்கும் மணிப்பூர் மக்களின் பதிலடியாக இந்தத் தேர்தலில் வாக்குகளில் பிரதிபலித்துள்ளது. மணிப்பூரில் பாஜக தலைமை யிலான ஒன்றிய, மாநில அரசுகள்  மணிப்பூர் மீது நடத்திய தாக்குத லும், மக்களைத் திரும்பிப்பார்க்கக் கூடத் தயாராக இல்லாத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பைரேன் சிங்கின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையும் மணிப்பூரில் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இன்னர் மணிப்பூர் தொகுதி யில் 2019 இல், சிபிஐ வேட்பாளர் 1,33,813 வாக்குகளைப் பெற்றிருந் தார். இம்முறை சிபிஐ வேட்பாள ரை நிறுத்தாதது காங்கிரஸ் வேட்பா ளருக்கு சாதகமாக அமைந்தது.

;