states

img

மும்பை பெட்ரோல் பங்க் விபத்து - 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் ராட்சத விளம்பரப் பதாகை பெட்ரோல் பங்க் மீது சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 
மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப் புயலில், பெட்ரோல் பங்க் மீது 100 அடி உயர ராட்சத விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 
 

;