states

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்!

பெங்களூரு, ஜூலை 8- 2023-24 நிதியாண்டிற்கான கர்  நாடக மாநில பட்ஜெட்டை முதல்வர்  சித்தராமையா வெள்ளிக்கிழமை யன்று தாக்கல் செய்தார். ரூ. 3 லட்சத்து 27 ஆயிரத்து 747  கோடி மதிப்பிலான 2023-24ஆம்  நிதியாண்டிற்கான இந்த பட்ஜெட்  டில் புதிய வரிகள் எதையும் விதிக்  காத முதல்வர் சித்தராமையா, விவ சாயிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி யில்லாக் கடன் வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளார். தேர்தலின்போது, விவசாயி கள், விவசாயக் கூலித் தொழிலா ளர்கள், அமைப்புச்சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோர், பெண் கள், மாணவர்கள் ஆகியோரின் நலன்களுக்காக அறிவிக்கப்பட்ட கிரகஜோதி, கிரகலட்சுமி, பெண்  கள் சக்தி, யுவசக்தி மற்றும் அன்ன பாக்யா ஆகிய ஐந்து முக்கிய திட் டங்களை செயல்படுத்துவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் ரூ. 52 ஆயி ரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்  என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செலவை ஈடுகட்டுவ தற்காக மதுபானங்கள் மீதான வரி  உயர்த்தப்படும்; இதனால் ஆண் டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி கிடைக்  கும். மதுபானங்கள் விலை உயர்ந் தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பி டும் போது கர்நாடகாவில் விலை  குறைவாகவே இருக்கும் என்று  முதல்வர் சித்தராமையா தெரி வித்துள்ளார்.

தேசிய கல்வி கொள்கை ரத்து

கல்வித்துறையைப் பொறுத்த வரை, பாஜக ஆட்சியின்போது, ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் பாடத் திட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்  கள் கைவிடப்பட்டு, மாணவரு குளுக்கு உண்மையான வர லாற்றை தெரிவிக்கும் பாடங்கள் சேர்க்கப்படும்; தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்; விவ சாயிகள் மற்றும் வேளாண் தொழி லுக்கு விரோதமாக பாஜக ஆட்சி யில் கொண்டுவந்த சட்டங்கள் ரத்து  செய்யப்படும்; நந்தினி மூலம் தயா ரிக்கப்படும் பால் பொருட்களை இந்தியா மட்டுமில்லாமல், வெளி நாடுகளிலும் விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

 

;