states

img

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தில்லியில் ரூ.971 கோடி  செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டடத்திற்கு பிரதமர் வரும் 10ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். 
இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது அப்பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 
இதையடுத்து வெறும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மட்டுமே நடக்க உள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். 
இதைத்தொடர்ந்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மட்டும் நடத்திக்கொள்ள உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மரங்களை வெட்டவும்,  கட்டடங்களை இடிக்கவும், தடை விதித்ததோடு புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான  பணிகளை நடைபெற வில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

;