விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் கருத்து தெரிவித்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசுடன் நடத்திய 5 கட்ட பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் டிசம்பர்.8ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் வதோரா பகுதியைச் சேர்ந்த சைலேஷ் பர்மார் என்பவர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த இளைஞரின் கருத்து தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது கம்பத் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவத்துள்ளனர்.