திங்கள், மார்ச் 1, 2021

states

img

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத்தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கும் மேல் கடும் குளிரையும்  பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அமைதியாக நடந்து வரும் போராட்டத்தில் போராட்டக்களத்திலேயே 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.  நாளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். 
 மோடி அரசு விவசாயிகளின் போராட்டத்தை  ஒடுக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் நாளை நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை ஜனாதிபதி உரையை காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

;