தலைநகர் தில்லியில் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி அரசு விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்கும் வகையில் கொண்டு வந்துள்ளது 3 புதிய வேளாண் சட்டங்கள் மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற கோரி தலைநகர் தில்லியில் தொடர்ந்து 26 வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத்தொடர்ந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை போராட்டக்களத்திலேயே 33 போர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இன்று முதல் தினமும் 11 விவசாயிகள் என ஒவ்வொரு குழுவாக உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். மேலும் டிசம்பர் 23 கிசான் திவாஸ் தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் உண்ணா விரதம் இருக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் டிசம்பர் 25 மற்றும் 27ல் ஹரியாணா சுங்கச்சாவடியில் கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
மோடி அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதி பட தெரிவித்துள்ளனர்.