வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

டிராக்டர் பேரணியை அனுமதிக்க தில்லி காவல்துறைக்கே அதிகாரம் - உச்சநீதிமன்றம் மீண்டும் திட்ட வட்டம்

டிராக்டர் பேரணியை அனுமதிக்க தில்லி காவல்துறைக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் மீண்டும்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். 
டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 
'டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவு எடுக்க வேண்டியது டெல்லி போலீஸார்தான். இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது. ஆதலால், நீங்கள் உங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம். டெல்லி போலீஸாருக்குத்தான் இதில் அதிகாரம் இருப்பதால், அவர்கள்தான் இதைக் கையாள வேண்டும்” எனக் கூறியது. மேலும், டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

;