states

img

பீகார்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணியில் தடியடி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பீகாரில் நடந்த பேரணியில் தடியடி நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக நாடு முழுவதும் இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
நேற்று பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் தலைநகர் பாட்னாவில் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி சென்றனர். அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

;