states

img

மகசேசே விருதை மறுத்தது ஏன்?

திருவனந்தபுரம், செப். 5- மகசேசே விருது மறுப்பு குறித்து சிபிஎம் மத்திய தலைமையுடன் விவாதிக்கப்பட்டதாக கேகே சைலஜா கூறினார். விருது குழுவிற்கு நன்றி தெரி வித்த சைலஜா, கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளை நிராகரித்த மகசேசே பெயரில் வழங்கப்பட்ட விருதினை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், கே.கே.சைலஜா மகசேசே விருதை நிராகரித்தது கட்சியின் கூட்டு முடிவு என்றும் விருதுக்கான பரிசீலனை குறித்து கே.கே.சைலஜா ஒரு வாரத்துக்கு முன்பே தெரிவித்ததாகவும், விருது நிராகரிக்கப்பட்டமை கட்சியின் கூட்டு முடிவு என்றும் குறிப்பிட்டார். மேலும் யெச்சூரி கூறுகையில், கேரள சுகாதாரத் துறையில் முன்னேற்றம் என்பது கூட்டு முயற்சியின் பலன் என்பதும், இந்த விருது தனி நபருக்கு உரி யது என்றும் விருது வழங்கும் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.  இந்த விருது ‘தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்று அறக்கட்டளை பதிலளித்துள்ளது. பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ராமன் மகசேசே யின் கம்யூனிச எதிர்ப்பும் விருது நிரா கரிக்கப்படுவதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளுக்கு அவமதிப்பு

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களில் முதன்மையான மகசேசே பெயரில் உள்ள விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருக்கு வழங்குவது அவமதிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறினார். கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் நூற்றுக் கணக்கான வீரர்களை வன்முறையில் ஒடுக்கியவரின் நினைவாக மகசேசே விருது வழங்கப்படுகிறது. அதனால் அந்த விருதை பெறுவது சரியல்ல என்பதை  புரிந்துகொண்டே கே.கே.சைலஜா  கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள் ளார்.
 

;