“தில்லியில், என் தந்தை தங்கியிருந்த ‘12, ஜன்பத் பங்களா’ வீட்டை காலி செய்யத் தயாராக இருந்தும், ஏன் இப்படி அவமானப்படுத்தப் பட்டோம்? என தெரிய வில்லை. போலீசாருடன் அதிகாரிகள் வந்து, வீட்டை அடித்து நொறுக்கி, எனது தந்தையின் புகைப்படம், டாக்டர் அம்பேத்கர் சிலை உள்ளிட்ட பொருட் களை சாலையில் வீசிய விதம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.” என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவரான - மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.