states

img

சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பாடம் புகட்டுங்கள்!

புதுதில்லி, நவ. 14- விவசாயிகளுக்கு எதிரான - கார்ப்பரேட் ஆதரவு பாஜகவுக்கு பாடம் புகட்டுங்கள் என சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநில மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கை யில், “விவசாயிகளுக்கு எதிரான 3  வேளாண் சட்டங்களை ஒன்றிய மோடி  அரசு திணித்ததை எதிர்த்து அனைத்து விவசாய அமைப்புகள் இணைந்து 380 நாள் நீண்ட போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தின் பொழுது 725 விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். விவசாயிகளின் மரணங்களுக்கு ஒன்றிய அரசு, குறிப்பாக பிரதமர் மற்றும் ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பொறுப்பேற்க வேண்டும். 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் இயக்கம் துவங் கியதும், ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் தலைவர்களுடன் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தினார். மூன்று முறை யும் பேச்சுவார்த்தை தோல்வியடைந் தது. 380 நாட்களுக்குப் பிறகு விவசாயி களின் விடாமுயற்சி மற்றும் உறுதி யான எதிர்ப்பு காரணமாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற  வேண்டிய கட்டாயம் ஒன்றிய அர சுக்கு ஏற்பட்டது. வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெற்ற பின் விவசாயி களுக்கு எழுத்துப்பூர்வமான உறுதி மொழியை  வேளாண் துறை செயலா ளர் ஸ்ரீ சஞ்சய் அகர்வால் அளித்தார். இந்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி யையும் நிறைவேற்றாமல் விவசாயி களுக்கு துரோகம் இழைத்தது ஒன்றிய பாஜக அரசு.  ஒன்றிய அரசு, விவசாய அமைப்பு களின் ஒப்புதலுடன் குறைந்தபட்ச ஆத ரவு விலைக்கான சட்ட உத்தரவாதத்  திற்காக சாதாரண குழுவைக் கூட அமைக்கவில்லை. மேலும் அளிக்கப் பட்ட பிற உத்தரவாதங்களையும் நிறை வேற்றவில்லை. இதனால் எஸ்கேஎம் அமைப்பு மீண்டும் ஒருமுறை வேளாண் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி யது. வழக்கம் போல அவர் பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார். ஆனால் இன்றளவும் ஒன்றைக் கூட ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.

ஒன்றிய வேளாண் அமைச்சரை வீழ்த்துவீர்

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்த லில் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மொரேனா மாவ ட்டத்தில் உள்ள திமானி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் போட்டி யிடும் சட்டமன்ற தொகுதியில் கூட  தினை மற்றும் பிற பயிர்கள் குறைந்த பட்ச விலையில் கொள்முதல் செய்யப் படுவதில்லை. விவசாயிகள் கடனில் தத்தளித்து, விவசாயத்தை கைவிட்டு நகர்ப்புற கூலி வேலை செய்யும் நிலை க்கு தள்ளப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது; ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடியை அமல்படுத்த ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பட்ஜெட் ஒதுக்கீடும் குறைக் கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க வேளாண் அமைச்சர் தயாராக இல்லை. இதனால் மத்தியப்பிரதேச மாநில திமானி தொகுதி வாக்கா ளர்கள் விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை தண்டிக்கவேண்டும். அவரைத் தோற்கடிக்க வேண்டும். நரே ந்திர சிங் தோமரை மட்டுமல்லாமல், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநில மக்கள், விவசாயிகள், ‘விவசாயி களுக்கு எதிரான - கார்ப்பரேட் ஆதரவு பாஜகவுக்கு’ பாடம் கற்பிக்க  வாக்க ளியுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.