புதுதில்லி, செப்.19- ஒன்றிய அமைச்சர வை விரைவில் மாற்றியமை க்கப்பட உள்ளதாக தக வல்கள் வெளியாகிஉள்ளன. கடந்த ஆகஸ்ட் 2ஆவது வாரத்திலேயே ஒன்றிய அமைச்சரவை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவிதமான மாற் றங்களும் செய்யப்பட வில்லை. இந்நிலையில் செப்டம் பர் இறுதியில் ஒன்றிய அமை ச்சரவையை மாற்றி யமைக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர்களின் செயல்பாடுகளை உன்னிப் பாக கவனித்து வரும் பிரதமர் மோடிக்கு சில அமைச்சர் களின் செயல்பாடுகளை திருப்திகரமாக இல்லை என கருதுவதாக கூறப்படு கிறது. மேலும் 2024-இல் நடை பெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்வைத்தும் இந்த மாற்றம் மேற்கொள்ளப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, மக்கள வைத் தேர்தலில் 3-ஆவது முறையாகவும் வெற்றிபெறு வதற்கு உரிய வகையில், அமைச்சரவையில் சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்ப தாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள ஒன்றிய அமைச்சர்களில் 10 முதல் 12 அமைச்சர்கள் வரை நீக்கப்படலாம் எனவும், சில அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.