புதுதில்லி, டிச.9- ஒன்றிய அரசு 2008-ஆம் ஆண்டு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 80 எம்ஐ-17 வி5 (Mi-17V5) ஹெலிகாப்டர் களுக்கான ஒப்பந்தத்தை ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளது. முதலாவது ஹெலி காப்டர் 2013-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ஏழு ஹெலிகாப்டர்களையும் வழங்கியுள்ளது. 80 எம்ஐ-17 வி5
80 எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்கள்:
இந்த ஹெலிகாப்டர் மிகவும் உறுதியா னது மற்றும் வலுவானது. மேக மூட்டம், கடுமையான மழை போன்ற அசாதாரண சூழ்நிலைகளையும் எதிர் கொள்ளக் கூடியது. இதில் பல வகை கள் உள்ளன. இதில் படைகளை ஏற்றிச் செல்வதற்கான 36 இருக்கைகள், சரக்குப் போக்குவரத்து மற்றும் அவசரகால மிதவை ஆகியவையும் இடம் பெற்றுள் ளன. இந்த ஹெலிகாப்டர் ஒரு விமானி, துணை விமானி மற்றும் விமானப் பொறி யாளர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு வினரால் இயக்கப்படுகிறது. இதில் சிங்கிள் ரோட்டார் ஹெலிகாப் டர் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும். அதிகபட்சம் 675 கி.மீ. பயணிப்பதற்கான எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். இதில் கூடுதலாக எரிபொருள் நிரப்புவதற்கான சேமிப்புக் கலனும் உள்ளது. இரண்டு எரிபொருள் சேமிப்புக்கலன் உள்ளதால் அதிகபட்சம் 1,180 கிமீ பயணிக்க முடியும். இது அதிக பட்சமாக 4,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது.