states

img

2022 ஜூலையில் 2.4 சதவிகிதமாக சரிந்த நாட்டின் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி!

புதுதில்லி, செப். 14 - இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியானது, தொழில்துறை உற்பத்தி குறியீட்டின்படி, 2022 ஜூன் மாதத்தில் 12.7 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 12 அன்று ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட  அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தக வலின்படி, 2022 ஜூலையில் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 2.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2022 மாா்ச் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி  2.2 சதவிகிதம் இருந்ததுதான் மிகவும் குறைந்தபட்ச வளர்ச்சியாக இருந்தது. அதன்பின்னர், தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவிகிதமாக வும் மே மாதத்தில் 19.6 சதவிகிதமாகவும் இருந்தது. ஜூன் மாதத்திலும் அது 12.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது 2.4 சதவிகிதமாக சரிந்துள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாகும். மே, ஜூன் மாதங்களை விட  தொழிற்துறை வளர்ச்சி ஜூலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி, தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு எண் (Index of Industrial Production - IIP)  கடந்த 2021 ஜூலையில் 11.5 சதவிகிதமாக வளா்ச்சியடைந்தது. அது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3.2 சதவிகிதம் என்ற அளவிலேயே வளா்ச்சி அடைந்துள்ளது. துறைகள் வாரியாக, 2021 ஜூலையில் 11.1 சதவிகிதமாக இருந்த மின்சாரத்  துறை உற்பத்தி வளா்ச்சி 2022 ஜூலை யில் 2.3 சதவிகிதமாக சரிந்துள்ளது. இதே போல கடந்தாண்டு 19.5 சதவிகிதமாக இருந்த சுரங்கத் துறை உற்பத்தி வளா்ச்சி தற்போது 3.3 சதவிகிதமாக சுருங்கி யுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை யிலான காலகட்டத்தில் ஐஐபி 10 சதவிகிதம் என்ற அளவில் உயா்ந்துள்ளது. இது 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை  வரையிலான காலகட்டத்தில் 33.9 சத விகிதமாக முக்கியமானதாகும். புதிய முதலீடுகள் தொடா்பான நிலவரத்தைப் பிரதிபலிக்கும் மூலதனப் பொருட்களின் உற்பத்தி, 2021 ஜூலையில் 30.3 சதவிகிதமாக இருந்தது, 2022  ஜூலையில் 5.8 சதவிகிதமாகசரிந்துள்ளது. நுகா்வோர் பொருட்கள் பிரிவில் உற்பத்தியானது, கடந்த ஆண்டு ஜூலையில் 19.4 சதவிகிதமாக இருந்தது. அது, இந்த முறை வெறும் 2.4 சதவிகிதம் மட்டுமே வளா்ச்சி கண்டுள்ளது. ஐஐபி-யில் சுமாா் 34 சதவிகிதம் பங்கு வகிக்கும் முதன்மைப் பொருட்கள் பிரிவில்,  ஜூலை மாத உற்பத்தி 2.5 சதவிகிதம் வளா்ச்சி அடைந்தது. இது, 2021-ஆம்  ஆண்டு ஜூலை மாதத்தில் 12.4 சதவிகித மாக இருந்துள்ளது.