states

வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு!

புதுதில்லி, செப். 28 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. சர்வதேச வர்த்தகச் சந்தையில், அமெரிக்க டாலர் உடனான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு, கடந்த வாரம் டாலருக்கு - 79 ரூபாய் 98 காசுகளாக இருந்தது. இது ஒரே  வாரத்தில் மேலும் 2 ரூபாய் சரிந்து, புதன்கிழமையன்று 81 ரூபாய் 95 காசுகள் அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. செவ்வாயன்று வர்த்தக நேர முடிவில், டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு  81 ரூபாய் 53 காசுகளாக இருந்தது. முன்ன தாக ஒருகட்டத்தில் 81 ரூபாய் 65 காசுகள் என்ற அதிகபட்ச சரிவைச் சந்தித்தது. இந்நிலை யில்தான், புதன்கிழமையன்று டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு  மேலும் சரிந்து, அதிகபட்சமாக 81 ரூபாய் 95 காசுகள் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இதற்கு முன்பு 80 ரூபாய் 12 காசுகள் அளவிற்கு வீழ்ச்சி கண்டி ருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது  அதையும் தாண்டி 81 ரூபாய் 95 காசுகள் அள விற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பானது, 2022-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கி ஆகஸ்ட் மாத பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து, கடந்த செப்டம்பர் 21 அன்று தனது  பென்ச்மார்க் வட்டி விகிதத்தை (Benchmark Interest Rate) 0.75 சதவிகிதம் உயர்த்தியது. அப்போது முதலே, முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்க டாலரின்  வலிமையை, பிற முன்னணி நாணயங்க ளோடு ஒப்பிட்டு கணக்கிடப்படும் அமெரிக்க டாலர் குறியீடு (US DOLLAR INDEX) புதன்கிழமையன்று காலை வர்த்தகத்தில் 114.68 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்தது. இது பல வருட வரலாற்று உச்ச அளவாகும். அதேபோல் அமெரிக்காவின் 10 ஆண்டு கருவூல பத்திர முதலீட்டின் லாப அளவு 4  சதவிகிதம் வளர்ச்சி கண்டது. இது 2010-க்கு  பின்பு பதிவாகும் அதிகப்படியான வளர்ச்சி யாகும். இவற்றின் காரணமாகவே, இந்திய ரூபாய் மதிப்பு புதன்கிழமையன்று 81 ரூபாய்  95 காசுகள் அளவிற்கு சரிவைக் கண்டதாக கூறப்படுகிறது. இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை பெரும் சுமையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் கடுமை யாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இதனிடையே, நரேந்திர மோடி ஆட்சியில் மட்டும் ரூபாய் மதிப்பு 41.5 சதவிகிதம் அளவிற்கு சரிவைச் சந்தித்து இருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்னரிடே கூறியுள்ளார். சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, கடந்த 2021  செப்டம்பரில் ரூ. 73-ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது 81 ரூபாய் 63 காசு களாகி விட்டது. பிரதமா் மோடியின் புகழ்  12 மாதங்களில் 12 சதவிகிதம் சரிவடைந்துள் ளது. மோடி பதவியேற்கும் போது டால ருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு  58 ரூபாய் 62 காசுகளாக இருந்தது. தற்போது  அவரது ஆட்சிக்காலத்தில் ரூபாய் மதிப்பு 41.5 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளது.

;