சென்னை, மார்ச் 29- இந்தியாவைக் காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்க ளிப்போம் என்று மக்களுக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அறைகூவல் விடுத்துள்ளது.இது குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியர்களாகிய நமக்கு மத சுதந்திரம் உண்டு, எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதேநேரத்தில் அரசானது மதச்சார்பற்றதாக இருக்கும். இந்த அரு மையான கூறுகளைக் கொண்டது நமது அரசியல் சாசனம். இதை அழித்து ஒரு மதச்சார்பு அரசை உருவாக்குவதே பாஜகவின் கேடுகெட்ட ஆசை. அதற்காகவே, குடியுரிமைச் சட்டத்தில் மத அம்சத்தைப் புகுத்தியது. இந்தியர்களை இந்திய மண்ணிலேயே அகதிகளாக்க சி.ஏ.ஏ எனும் கொடூர மசோதாவைக் கொண்டு வந்தது. அது அதிமுக, பாமகவின் ஆதரவோடு சட்டமானது! மதநல்லிணக்கம் நமது அழகான மரபு. அதைக் கெடுத்து, மத அடிப்படையில் மக்களைப் பிளந்து அரசியல் செய்வதே பாஜகவின் வழக்கம். இது, மக்களின் கவனத்தை அவர்களது வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பும் தந்திரம்.
அனைத்து மத மக்களின் எதிரி
மோடி ஆட்சியில் எந்த மதத்து ஏழைகளுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை; கிடைத்தது எல்லாம் துன்பமே, துயரமே. கேஸ் விலை அதிகரித்தது. பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்தது. இவை எல்லா விலைகளையும் அதிகரித்தன. அரிசிக்கும் பருப்பும் எண்ணெய்க்கும் அநியாய ஜிஎஸ்டி வரி விதித்து, அனைத்து மதத்தவரையும் வாட்டி வதைப்பது பாஜக ஆட்சியே! “எம்முடையது ஆன்மீக அரசியல், தர்ம ஆட்சி” என்கிறது பாஜக. ஆனால், ஊழல் பேர்வழிகள் அந்தக் கட்சியில் சேர்ந்தால் உத்தமர்கள் ஆகிறார்கள்! ஊழலைச் சட்டப்பூர்வமாக்கினால் அது ஊழல் ஆகாதன்றோ? அதற்காகவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வந்தார்கள். அதில் சரி பாதிக்கு மேலே அவர்களுக்கு கிடைத்தது. அதிலும் ஒரு பகுதி ரெய்டு விட்டு மிரட்டிப் பறித்தது! இந்திய வரலாற்றில் இப்படியொரு அசிங்கம் நடந்தது இல்லை. இதுவா ஆன்மீக அரசியல்? இல்லை, ஊழல் அரசியல். இதுவா தர்ம ஆட்சி? இல்லை, அதர்ம ஆட்சி.
மாநிலத்தையே பறித்த அவலம்
நமது அரசியல் சாசனத்தின் மற்றொரு அருமை யான கூறு கூட்டாட்சி கோட்பாடு. ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே அதன் சாரம். மாநில சுயாட்சியா கேட்கிறீர்கள், மாநிலங்களே கிடையாது என்பதுதான் பாஜகவின் கேவலமான லட்சியம். நேற்றுவரை ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் இன்று இல்லை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்துவிட்டார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அடாவடித்தனங்கள் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவமதிக்கிறார்கள். அதற்கு தமிழக ஆளுநரின் செயல்களே தக்க ஆதாரங்கள். இதற் கெல்லாம் உச்சமென ஜார்க்கண்ட், தில்லி முதல்வர் களைக் கைது செய்துவிட்டார்கள்! “ஒரேநாடு ஒரே தேர்தல்” என்பதற்கான அறிக்கை யைத் தயார் செய்துவிட்டார்கள். தப்பித்தவறி பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் “ஒரே தேர்தல், அதிபர் தேர்தல்” என்பார்கள்! பல தேசிய இனங்களைக் கொண்ட நமது நாட்டின் சகல பன்மைக் கூறுகளை யும் அழித்து விடுவார்கள். தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்பதே பாஜகவினருக்கு வேம்பாய் கசப்பது என்பதை அவர்களது ஆளுநரின் பேச்சுக்களிலிருந்து அறியலாம்.
ஆபத்து.. ஆபத்து
நமது வரலாற்று நாயகர்களான வள்ளுவர், வள்ளலார், அய்யா வைகுண்டர் ஆகியோரின் உண்மை யான கோட்பாடுகளைத் திரித்துக் கூறி வரலாற்று மோச டியில் இறங்கியிருக்கிறார்கள். சகலத்திலும் தங்களின் மனு அதர்ம சாஸ்திரத்தைக் காணத் துடிக்கிறார்கள். அதன் மூலம் சாதியத்தை, பெண்ணடிமைத்தனத்தை நிரந்தரமாக்கப் பார்க்கிறார்கள். இவை எல்லாம் நாம் பேணி வரும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கும் வேலை. “மீண்டும் வேண்டும் மோடி” என்கிறது பாஜக. மீண்டும் அவரது ஆட்சி என்றால் அரசியல்சாசனத்திற்கு ஆபத்து, மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து, மக்கள் நல்வாழ்வுக்கு ஆபத்து, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு ஆபத்து, தேர்தல் ஜனநாயகத்திற்கே ஆபத்து.. ஆபத்து! இதைத் தடுக்கும் ஒரே சக்தியாக இன்று எழுந்தி ருப்பது இந்தியா கூட்டணி. அதற்கு மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை வீழ்த்தி, ஒன்றியத்தில் மாற்று அரசை உருவாக்கும் வல்லமை உள்ளது. எனவே இந்தியாவைக் காக்க இந்தியாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம். வாக்கு களை சிந்தாமல் சிதறாமல் அந்த அணிக்கு அளித்து நாட்டை, அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.