states

img

10 மாதமாக ஜாமீனில் இருப்பவரை திடீரென காவலில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

புதுதில்லி, ஜூலை 6- குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதா ரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொட ரப்பட்ட வழக்கில் சமூக செயற்பாட்டாளர் டீஸ்தா  செதல்வாத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஜூலை 19 வரை நீட்டித்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டீஸ்டா செதல்வாத்தை குஜராத்  உயர்நீதிமன்றம், உடனடியாக சரணடைய உத்  தரவிட்டிருந்த நிலையில், “10 மாதங்களாக ஜாமீ னில் இருக்கும் ஒருவரை திடீரென காவலில்  வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன  வந்தது; ஒருவரின் நடத்தை ஆட்சேபணைக்கு உரியதாக இருக்கலாம், அதற்காக அவரின் சுதந்திரத்தை எப்படி பறிக்க முடியும்?” என்றும்  உச்சநீதிமன்றம் அதிரடியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்  களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை களில் அம்மாநில காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி 69 பேரோடு சேர்த்து மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கில் அன்றைய குஜராத்  முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, சிறப்பு புலனாய்வுக் குழு அவர்கள் அத்தனை  பேருக்கும் நற்சான்றிதழ் அளித்து வழக்கிலி ருந்து விடுதலை செய்தது. ஆனால், இஷான்  ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியும், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்தும் நீதி யை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினர். எனினும், உச்சநீதிமன்றமும் மோடி  உள்பட 64 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்  தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனித உரிமை அமைப்புகளுக்கு பேரிடியாக அமைந்தது. உச்சநீதிமன்றமே தங்களை விடுதலை  செய்துவிட்ட பின்னணியில், ஊக்கமடைந்த  ஆட்சியாளர்கள், ஒன்றிய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி டீஸ்டா செதல்வாத் உள்ளிட் டோரை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினர்.  குஜராத் வன்முறை தொடர்பான வழக்கு களில், நரேந்திர மோடியை வேண்டுமென்றே சிக்க வைக்கவும், ஆட்சியை கலைக்கவும் சதித்  திட்டம் தீட்டினார்கள் என்று கூறி, சமூக செயற்  பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், முன்னாள் டிஜிபி  ஸ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகி யோரை அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறை  கடந்த 2022 ஜூன் 25 அன்று கைது செய்தது. குறிப்பாக, குஜராத் வன்முறை குறித்து மாநில  அரசு மீது அவதூறுகளை பரப்ப அரசியல்வாதி யும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த  அகமது படேலிடம் இருந்து செதல்வாத் ரூ. 30  லட்சம் பெற்றதாக கூறி, டீஸ்டா செதல்வாத்தை  அவரது வீட்டுக்குள்ளே நுழைந்து தாக்கி கைது  செய்தது. 

இதற்கு இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஐக்கிய நாடுகள் அவை உட்பட சர்வதேச சமூகமும் தனது கண்டனத்தைத் தெரி வித்தது. நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட உலகின் மிக  முக்கியமான அறிஞர்கள் 11 பேர் கூட்டறிக்கை யும் வெளியிட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரில், டீஸ்டா செதல்  வாத் மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மட்டும்  தங்களுக்கு ஜாமீன் கோரிய நிலையில், 2022 ஜூலை 30 அன்று அகமதாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு விசாரணை தாமதமாகி வந்தது.  இதனால் டீஸ்டா உள்ளிட்டோர் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு  மனுவை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி  யு.யு. லலித், எஸ். ரவீந்திர பட், சுதாஷனு துலியா  அமர்வு, “குஜராத் உயர்நீதிமன்றத்தில் டீஸ்டா  தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு மாநில அரசு  பதிலளிக்க ஆகஸ்டில் உத்தரவிட்ட 6 வாரங்க ளுக்குப் பிறகு, திடீரென விசாரணையை ஒத்தி வைத்தது ஏன்? ஜாமீன் மனு மீதான விசாரணை யில் தாமதம் ஏன்?” என்று கேள்வி எழுப்பியது.  தொடர் விசாரணைக்குப் பின்னர், செப்டம்பர் 2 அன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்தப் பின்னணியில், சிறையிலிருந்து விடு தலையான டீஸ்டா செதல்வாத் கடந்த 10 மாத மாக ஜாமீன் நீட்டிப்பு பெற்று வந்தார். 2023 ஜூலை 1 அன்று திடீரென ஜாமீனை நீட்டிக்க மறுத்து விட்ட குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்ஜார்  தேசாய், செதல்வாத்தை உடனடியாக சரணடை யுமாறு உத்தரவிட்டார். அவரின் ஜாமீன் மனுவை யும் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து டீஸ்டா செதல்வாத் உடனடி யாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். ஜூலை 1 அன்று மாலை 6.30 மணிக்கு நீதி பதிகள் ஏ.எஸ். ஓகா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகி யோர் மனுவை விசாரித்தனர். குஜராத் அரசு  சார்பில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்  துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். செதல்  வாத்தின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  வாதங்கள் முடிந்த நிலையில், இரண்டு நீதி பதிகள் அமர்வானது மாறுபட்ட தீர்ப்பை வழங்  கவே, வழக்கு தலைமை நீதிபதியின் பார் வைக்குச் சென்றது. அவர் இந்த மனுவை விசா ரிக்க, நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வை நியமித்தார். இந்த  அமர்வு விசாரணை நடத்தி, அன்று இரவு 10  மணிக்கு, டீஸ்டா செதல்வாத்திற்கு இடைக்கால  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான டீஸ்டாவின் மனு, புத னன்று (ஜூலை 5) மீண்டும் விசாரணைக்கு வந்  தது. அப்போது, டீஸ்டா செதல்வாத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஜூலை 19 வரை நீட்டித்து பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு உத்தர விட்டது. முன்னதாக, செதல்வாத்தை உடனடியாக சர ணடையுமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “குஜராத் நீதிமன்ற தனி நீதிபதி, ஒரு வாரம்  கூட இடைக்கால பாதுகாப்பு வழங்காதது முற்றி லும் தவறு. சமூக ஆர்வலர்களுக்கு சிறிது அவ காசம் அளித்திருக்க வேண்டும். உச்ச நீதி மன்றம் ஏற்கெனவே இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கும் போது, குஜராத் உயர் நீதி மன்றம் ஒரு வாரம் பாதுகாப்பு வழங்குவது சிறந்த தாக இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டது. அப்போது, ஒன்றிய அரசின் வழக்கறிஞர் குறுக்கிட்டு, “குஜராத் கலவரச் சம்பவம் சாதா ரண வழக்கு அல்ல” என்று தெரிவித்த நிலையில்,  “10 மாதங்களாக ஜாமீனில் இருக்கும் மனு தாரரை (டீஸ்டா செதல்வாத்தை)திடீரென காவ லில் எடுத்து விசாரிப்பதற்கு என்ன அவசியம் வந்தது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி னர். மேலும், “மனுதாரரின் நடத்தை ஆட்சேப ணைக்கு உரியதாக இருக்கலாம், அதற்காக ஒருவரின் சுதந்திரத்தை எப்படி பறிக்க முடி யும்?” என்றும் அவர்கள் காட்டமாக கேட்டனர்.

 

;