states

img

மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க!

புதுதில்லி, ஜூலை 11- ராணுவம், துணை ராணுவம்,  பாதுகாப்பு அளிக்கும் விவகாரங் களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடி யாது எனக் கூறி, குக்கி அமைப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரத்தில், மணிப்பூர் மக்க ளின் பாதுகாப்பை உறுதிசெய்யு மாறு, ஒன்றிய - மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூ ரில், ‘மெய்டெய்’ சமூகத்தினருக்கும்,  குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி யினர் சமூகத்தினருக்கும் இடையே இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி துவங்கி, கடந்த 60 நாட்  களுக்கும் மேலாக அங்கு வன்முறை,  தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு தொடர்ந்து  வருகிறது.  இரண்டு தரப்பிலும், இதுவரை அதிகாரப்பூர்வமாகவே 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழி பாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டு உள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர்  நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 20 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மணிப்பூரில் அமைதி திரும்பவும், வன்முறை யைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்  றிய அரசுக்கு உரிய உத்தரவு பிறப்  பிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில்  பல்வேறு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. 

இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தபோதே, மணிப்பூர்  பழங்குடியினர் அமைப்பு (Tribal Forum) என்ற தன்னார்வ அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால விண்ணப்ப மனு ஒன்றைத் தாக்கல்  செய்தது. அதில், “மணிப்பூரில் குக்கி  பழங்குடியினரை ‘இன அழிப்பு’ செய்  யும் கொள்கையை ஒன்றிய அரசும்,  மாநில முதல்வர் பைரேன் சிங்கும்  பின்பற்றி வருகின்றனா்; நடைபெறும்  வன்முறைச் சம்பவங்களுக்கு கார ணமே, ஆயுதமேந்திய பாஜக ஆத ரவுக் குழுக்கள்தான்..” என்று குற்றம்  சாட்டியது. “எனவே, ஒன்றிய அரசின்  வெற்று வாக்குறுதிகளை நம்பாமல்,  குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கு  ராணுவத்தின் மூலம் பாதுகாப்பளிப் பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்  தது. இந்த வழக்கு ஜூலை 3 அன்று விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மணிப்பூர் வன்முறை குறித்து  விரிவான அறிக்கையை ஒரு வாரத்  தில் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அர சுக்கு உத்தரவிட்டனர். கலவரத்தைத்  தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை கள், மறுவாழ்வு நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு எவ்வாறு இருக்கி றது; கைது நடவடிக்கை என்ன; எவ்வ ளவு ஆயுதங்கள் பறிமுதல் செய் யப்பட்டிருக்கின்றன; எத்தனை நிவா ரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்  ளது; இயல்பு நிலை திரும்ப என்  னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்  ளது என அனைத்து தகவல்களை யும் கொண்டதாக அந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று கூறியிருந்த னர். 

திங்களன்று (ஜூலை 10) நடை பெற்ற விசாரணையின்போது, “மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை  நிலைநாட்ட அனைத்து தரப்பும்  ஆக்கப்பூர்வமான ஆலோசனை களை முன்வைக்க வேண்டும்” என்று  நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலை யில், செவ்வாயன்றும் விசாரணை தொடர்ந்தது. அப்போது, “ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்டவைகளுக்கு, இவ்வாறுதான் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச  நீதிமன்றம் பிறப்பிக்கவும் இயலாது”  என்று கூறிய நீதிபதிகள், குக்கி பழங் குடிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனு வை நீதிபதிகள் தள்ளுபடி செய்வ தாக அறிவித்தனர். அதேநேரம், மணிப்பூர் மாநில மக்களின் பாது காப்பை ஒன்றிய - மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.