states

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் “முட்டாள்கள்”

நியூயார்க், செப்.24- மைக்கை அணைக்காமல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை முட்டாள்கள் என்று தென் கொரிய ஜனாதிபதி திட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நிதிக்கான கூடுதல் பங்கை அமெரிக்கா தருவது பற்றி ஜோ பைடனுடன் தென் கொரிய ஜனாதிபதி யூன் சக் இயோல் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிதிக்காக அமெரிக்கா 600 கோடி அமெரிக்க டாலர் தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிதியைத் தந்து விடுவதாகக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்றுக் கொண்டார்.  ஆனால், அவருடைய ஒப்புதலையும் தாண்டி அமெ ரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தால்தான் இந்த நிதி  ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்து சேரும்.  இதுகுறித்து ஜோ பைடனிடம் பேசிவிட்டுத் திரும்பிய யூன் சக் இயோல், மைக் அணைக்காமல் இருப்பதைக் கவனிக்காமல் தனது அதிகாரிகளிடம், “அமெரிக்கக் காங்கிரசில் இந்த முட்டாள் கள் ஒப்புதல் தராவிட்டால், ஜோ பைடனுக்கு தர்மசங்கட மாகிவிடும்” என்று கூறியிருக்கிறார். இது காணொளியா கப் பதிவும் ஆகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் இது பெரும் பரபரப்பாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஒரே நாளில் தென் கொரியா வில் 50 லட்சம் பார்வைகள் காணொளியை பார்த்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை முட்டாள்கள் என்று நட்பு நாடான தென் கொரிய ஜனாதிபதி கூறி யிருப்பது அரசு ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. தனது கருத்து பற்றி தென் கொரிய ஜனாதிபதி இதுவரையில் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசுத்தரப்பிலும் எதுவும் கூறவில்லை.